Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் உலக கோப்பை ஒருநாள் தொடர்.. இந்தியா, பாகிஸ்தான் போட்டி எப்போது? அட்டவணை வெளியீடு

மும்பை: 2025 ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி அறிவித்திருக்கிறது. அதன்படி செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் நவம்பர் இரண்டாம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா,பாகிஸ்தான்,தென் ஆப்பிரிக்கா,இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் பலப் பரீட்சை நடத்துகிறது.இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறாமல் வெளியேறியது.

ICC women World cup

இந்த தொடர் இந்தியாவில், பெங்களூர், கௌஹாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்பட்டதை அடுத்து தற்போது பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மற்றும் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் ஒருவேளை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி தகுதி பெற்றால் அந்த போட்டி கொழும்புவில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் இந்திய, இலங்கை அணியை பலப் பரீட்சை நடத்துகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இந்த ஊரில் விளையாடுகின்றது.

பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி கொழும்புவில் விளையாடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் ஒன்பதாம் தேதி இந்திய அணி தங்களுடைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை விசாகப்பட்டினத்தில் எதிர்கொள்கிறது.

அக்டோபர் 12ஆம் தேதி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை இந்தியா மகளிர் அணி விசாகப்பட்டினத்தில் எதிர்கொள்கிறது. இதை தொடர்ந்து அக்டோபர் 19ஆம் தேதி இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்தூரில் நடைபெறுகிறது. அக்டோபர் 23ஆம் தேதி கௌஹாத்திகள் இந்திய அணி, நியூசிலாந்து உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் அக்டோபர் 26 ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அரையிறுதி ஆட்டம் அக்டோபர் 29ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் அரை இறுதி கவுகாத்தி அல்லது கொழும்பு வில் நடைபெறும். இரண்டாவது அரையிறுதி போட்டி அக்டோபர் 30ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது. நவம்பர் 2ஆம் தேதி இறுதிப்போட்டி கொழும்பு அல்லது பெங்களூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Story first published: Monday, June 16, 2025, 15:35 [IST]
Other articles published on Jun 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+