Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படி கேளு சபாசு.. மித்தாலி ராஜுக்கு சானியா மிர்ஸா ஆதரவு!

டெல்லி: உங்களுக்குப் பிடித்த ஆண் வீரர் யார் என்று கேட்ட பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ் கொடுத்த நெத்தியடியை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா வரவேற்று ஆதரித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மகளிர் உலகக் கோப்பைத் தொடருக்காக இங்கிலாந்து போயுள்ளது. லண்டனில் நடந்த டின்னர் விருந்தின்போது மித்தாலி ராஜிடம், பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் உங்களுக்குப் பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டார்.

ICC Women's WC 2017 : Sania Mirza applauds Mithali Raj for her reply to journalist

இதனால் அதிருப்தி அடைந்த மித்தாலி, இதே கேள்வியை எந்த ஆண் வீரரிடமாவது போய் உங்களுக்குப் பிடித்த பெண் வீராங்கனை யார் என்று கேட்டுள்ளீர்களா என்று திருப்பிக் கேட்டு பதிலடி கொடுத்தார் மித்தாலி.

அவரது இந்த பதிலடிக்கு வரவேற்பு குவிந்து வருகிறது. ஏராளமான பத்திரிகையாளர்களே மித்தாலியின் பதிலடிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர், பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸாவும் மித்தாலிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சானியா மிர்ஸா வெளியிட்டுள்ள டிவீட்டில் மித்தாலியின் பதில், அந்தக் கேள்வியையே சாகடித்து விட்டதாக கூறிப் பாராட்டியுள்ளார். இந்த டிவீட்டுக்கு மித்தாலி ராஜ் விடுத்துள்ள பதிலில், சானியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, June 24, 2017, 9:41 [IST]
Other articles published on Jun 24, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+