Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி மகளிர் உலககோப்பை பைனல்.. தென்னாப்பிரிக்க அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 299 ரன்கள் இலக்காக இந்திய மகளிர் அணி நிர்ணயித்திருக்கிறது. நவி மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது.

எனினும் 50 ஓவர்கள் முழுமையாக நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா மற்றும் செபாலி வர்மா ஆகியோர் அபாரமாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

ICC Womens World cup

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது. இதில் ஸ்மிருதி மந்தானா 45 ரன்கள் எடுத்தார். செமிபைனலில் அதிரடியாக சதம் அடித்த ஜெமிமா 24 ரன்களிலும் கேப்டன் ஹர்மன் பிரித் 20 ரன்களிலும் வெளியேறினார். எனினும் அணிக்கு மாற்று வீரராக கடைசி கட்டத்தில் வந்த செபாலி வர்மா 78 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார்.

இதில் 7 பவுண்டரி, இரண்டு சிக்ஸர் அடங்கும். நடு வரிசையில் தீப்தி சர்மா மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் உடன் 58 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இறுதியில் அம்ஜோத் கவுர் 12 ரன்களிலும் ரிச்சா கவுஸ் 34 ரன்களும் எடுக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 298 ரன்களில் 7 விக்கெட் எடுத்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் காக்கா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இந்திய அணி 300 ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 300 ரன்களை தாண்ட முடியவில்லை. எனினும் தென்னாப்பிரிக்காவும் பலம் வாய்ந்த பேட்டிங்கை கொண்டிருக்கிறது. இதனால் இந்திய வீராங்னைகள் சீரான இடைவெளிகளை விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி இது போன்ற பெரிய ஆட்டங்களில் சொதப்பும் நிலையில் அதேபோல் பேட்டிங்கில் மீண்டும் ஒருமுறை சோக் ஆகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Story first published: Sunday, November 2, 2025, 20:35 [IST]
Other articles published on Nov 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+