Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் உலககோப்பை கிரிக்கெட் - 11 முறை மோதி 11 முறையும் பாக். தோல்வி.. இந்திய மகளிர் அணி சாதனை

மவுண்ட் மாங்காவுனி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒரு முறை கூட வென்றது இல்லை.

இதனால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஸ்மிருதி அரைசதம்

ஸ்மிருதி அரைசதம்

தொடக்க வீரராக களமிறங்கிய செஃபாலி வர்மா டக் அவுட்டாக இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இதன் பின்னர் தீப்தி சர்மா, ஸ்மிருதி மந்தானா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ரன்களை சேர்த்தனர். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 92 ரன்கள் சேர்த்தது. தீப்தி சர்மா 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தானா அரைசதம் கடந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மித்தாலி ராஜ் 9 ரன்களும், ஹர்மான் பிரித் கவுர் 5 ரன்களிலும், ரிச்சா கவுஷ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 114 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

122 ரன்கள்

122 ரன்கள்

இதனையடுத்து, 7வது விக்கெட்டுக்கு ஸ்னே ரானா, பூஜா ஆகியோர் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்து பவுண்டரிகளாக விளாசினர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடக்க, 7வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 122 ரன்களை சேர்த்தது.அதிரடியாக விளையாடிய பூஜா 59 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். ஸ்னே ரானா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் சேர்க்க, இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 244 ரன்களை எடுத்ததுள்ளது.

பாகிஸ்தான் தோல்வி

பாகிஸ்தான் தோல்வி

245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் இந்திய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்மாக அமின் 30 ரன்கள் எடுக்க, அந்த அணி 137 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 108 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. ராஜேஸ்வரி கெய்க்வாட் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். மகளிர் உலககோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா வீழ்ந்ததே இல்லை என்ற சாதனை தொடர்கிறது. இதன் மூலம் 11 முறை மோதி, 11 முறையும் இந்தியா வென்றுள்ளது.

Story first published: Sunday, March 6, 2022, 13:43 [IST]
Other articles published on Mar 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+