
ஸ்மிருதி அரைசதம்
தொடக்க வீரராக களமிறங்கிய செஃபாலி வர்மா டக் அவுட்டாக இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இதன் பின்னர் தீப்தி சர்மா, ஸ்மிருதி மந்தானா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ரன்களை சேர்த்தனர். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 92 ரன்கள் சேர்த்தது. தீப்தி சர்மா 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சரிந்த விக்கெட்
பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தானா அரைசதம் கடந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மித்தாலி ராஜ் 9 ரன்களும், ஹர்மான் பிரித் கவுர் 5 ரன்களிலும், ரிச்சா கவுஷ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 114 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

122 ரன்கள்
இதனையடுத்து, 7வது விக்கெட்டுக்கு ஸ்னே ரானா, பூஜா ஆகியோர் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்து பவுண்டரிகளாக விளாசினர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடக்க, 7வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 122 ரன்களை சேர்த்தது.

245 ரன்கள் இலக்கு
அதிரடியாக விளையாடிய பூஜா 59 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். ஸ்னே ரானா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் சேர்க்க, இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 244 ரன்களை எடுத்துள்ளது. உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் மகளிர் அணி இந்த இலக்கை துரத்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











