Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் உலகக்கோப்பை போட்டிக்கு ரிசர்வ் டே இருக்கா? வில்லனாக வரும் மழை!

விசாகப்பட்டினம்: 2025 மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு உண்மையான சவால் இன்றுதான் தொடங்குகிறது. லீக் சுற்றில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது இந்திய அணி. ஆனால், விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் தங்களது மூன்றாவது லீக் போட்டியில், பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியப் அணி.

இந்த முக்கியமான போட்டிக்கு மழை வில்லனாக மாறுமா? என்ற கேள்வியும் உள்ளது. விசாகப்பட்டினத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கை எச்சரித்திருப்பது, கவலையை ஏற்படுத்தியுள்ளது. மதியம் 3 மணி அளவில் போட்டி துவங்க உள்ள நிலையில் மழை பெய்வதற்கான சாத்தியம் குறித்து பார்க்கலாம்.

ICC Women World Cup 2025 IND vs SA Will Rain Ruin the India vs South Africa Match at Visakhapatnam

விசாகப்பட்டினம் வானிலை அறிக்கை சொல்வது என்ன?

பிரபல வானிலை ஆய்வு தளமான AccuWeather-இன் கணிப்பின்படி, விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, மதிய வேளையில் அவ்வப்போது மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், போட்டி திட்டமிட்டபடி மதியம் 3 மணிக்குத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்த வானிலை அறிக்கையின்படி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக அதிகமாக (கிட்டத்தட்ட 50% முதல் 60% வரை) இருப்பதால், ஆட்டம் கடுமையாகப் பாதிக்கப்படலாம். ஓவர்கள் குறைக்கப்படவோ அல்லது போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்படவோ கூட வாய்ப்புள்ளது.

ரத்தானால் என்னவாகும்?

லீக் சுற்றுப் போட்டி என்பதால், இதற்கு 'ரிசர்வ் டே' கிடையாது. ஒருவேளை போட்டி மழையால் ரத்தானால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இது, புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இரு அணிகளின் வீரர்கள் விவரம்

இந்திய மகளிர் அணி:

பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, சினே ராணா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்ரீ சரணி, கிராந்தி கௌட், ரேணுகா சிங் தாக்கூர், அமன்ஜோத் கவுர், உமா சேத்ரி, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ்.

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி:

லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், மரிசான் கேப், அன்னெகே போஷ், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), க்ளோ ட்ரையான், நடின் டி க்ளெர்க், மசபாடா கிளாஸ், அயபோங்கா காகா, நான்குலுலேகோ மிலாபா, டுமி செக்குகுனே, நோண்டுமிசோ ஷங்கசே, கராபோ மெசோ, அன்னெரி டெர்க்சன்.

Story first published: Thursday, October 9, 2025, 11:00 [IST]
Other articles published on Oct 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+