Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் உலககோப்பையை நாங்க வென்றதுக்கு காரணமே நீங்க தான்.. மித்தாலி, கோஸ்வாமிக்கு கவுரவம் தந்த ஹர்மன்

ஐசிசி மகளிர் உலக கோப்பையை இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. இதனை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வருகிறது.

எப்படி 1983 ஆம் ஆண்டு கபிலிடை இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பை வாங்கி தந்தாரோ அதேபோல் மகளிர் கிரிக்கெட்டில் ஹர்மன்பிரித் தலைமையிலான இந்திய அணி முதல் கோப்பையை வென்றிருக்கிறது.

Ind vs sa ICC Women World cup

இன்னும் சொல்லப்போனால் மகளிர் உலகக் கோப்பையை வென்ற நான்காவது அணி முதல் ஆசிய அணி என்ற பல சாதனைகளை இந்தியா படைத்திருக்கிறது. இந்த உலகக் கோப்பையை தற்போது வென்றிருக்கலாம். ஆனால் இதற்காக பல ஆண்டுகள் உழைத்து இந்த கனவை எட்ட முடியாமல் போன இரண்டு வீராங்கனைகள் இருக்கிறார்கள். அதுதான் மித்தாலி ராஜ் மற்றும் ஜிலன் கோஸ்வாமி.

2005 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டி வரை வந்து இந்தியா தோல்வியை தழுவியது. இதேபோன்று 2017 ஆம் ஆண்டும் இந்திய அணி பைனல் வரை வந்து தோல்வியை தழுவியது. இந்த இரண்டு வீராங்கனைகள் அமைத்த பாதையில் தான் இன்று ஒட்டுமொத்த அணியும் சாதித்து இருக்கிறது. இதற்கு மரியாதை அளிக்கும் விதமாக நேற்று ஜூலன் கோஸ்வாமி மற்றும் மித்தாலி ராஜ் ஆகியோர் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது இருவரையும் அழைத்த இந்திய மகளிர் அணி கேப்டன் உலக கோப்பையை அவர்களிடம் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்த கோப்பையை வாங்கியதும் கோஸ்வாமி, ஹர்மன்பிரீத்தை கட்டி அணைத்து அழுதார். இதன்பின் வீராங்கனைகளுடன் அவர் கொண்டாடினார். இதைப் போன்று மித்தாலி ராஜ் கோப்பையை வாங்கிவிட்டு இந்திய வீராங்கனைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த கோப்பைக்காக தாங்கள் பல வருடம் தவம் கிடந்தோம் என்றும் தற்போது இந்த கோப்பை நமக்கு கிடைத்து விட்டது. நாம் உலகின் சாம்பியனாக மாறிவிட்டோம் என்று மித்தாலி ராஜ் கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார். மகளிர் உலக கோப்பையை வென்ற பிறகு தமக்கு முன்னாள் விளையாடிய வீரர்களிடம் கோப்பையை வழங்கி இந்திய வீராங்கனைகள் செய்த காரியம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

Story first published: Monday, November 3, 2025, 12:41 [IST]
Other articles published on Nov 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+