Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் உலககோப்பையில் நெகிழ்ச்சி.. பாக். வீராங்கனை கை குழந்தையுடன் விளையாடிய இந்திய வீராங்கனைகள்

மவுண்ட் மாங்கவுனி : மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை பிஸ்பா மரூஃப்புடன் இந்திய வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 244 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

குழந்தையுடன் வந்த கேப்டன்

குழந்தையுடன் வந்த கேப்டன்

இந்தப் போட்டியில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் அணி கேப்டன் பிஸ்பா மரூஃப் தனது 6 மாத கைக் குழந்தையுடன் கிரிக்கெட் மைதானத்திற்கு வந்தார். போட்டிக்கு நடுவே தனது குழந்தையை பார்த்து கொண்டு, அவர் கிரிக்கெட் விளையாடியது ரசிகர்களிடையே பிரமிப்பில் ஆழ்த்தியது.

குழந்தை ஃபாத்திமா

குழந்தை ஃபாத்திமா

பிஸ்பா மரூஃப் குழந்தை அவ்வப்போது இந்திய வீராங்கனைகள் கொஞ்சி , கொஞ்சி விளையாடினர். இந்த நிலையில் போட்டி முடிந்ததும், பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமாவை பார்ப்பதற்காக இந்திய வீராங்களை அனைவரும் பாகிஸ்தான் வீராங்கனைகளின் அறைக்கு சென்றனர்.

குழந்தையுடன் கொஞ்சல்

குழந்தையுடன் கொஞ்சல்

அப்போது , குழந்தை பாத்திமாவுடன் சுற்றி நின்ற இந்திய வீராங்கனைகள், அவருடன் கொஞ்சி, விளையாடினர். இதனையடுத்து குழந்தை பாத்திமாவுடன் இந்திய வீராங்கனைகள் போட்டோவும், வீடியோவும் எடுத்து கொண்டனர். பின்னர் குழந்தைக்காக சாக்லெட்டையும் பரிசாக இந்திய வீராங்கனைகள் தந்தனர்.

ரசிகர்கள் நெகிழ்ச்சி

ரசிகர்கள் நெகிழ்ச்சி

இந்திய வீராங்கனைகளின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. களத்தில் ஆக்கோரஷமாக விளையாடினாலும், களத்துக்கு வெளியே, ஒரு குடும்பம் போல், நண்பர்கள் போல் இரு நாட்டு வீராங்கனைகளும் இருந்தனர். தற்போது குழந்தை பாத்திமா கிரிக்கெட் ரசிகர்களிடையே Favourite குழந்தையாக மாறிவிட்டது.

Story first published: Sunday, March 6, 2022, 18:54 [IST]
Other articles published on Mar 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+