Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டி20 மகளிர் உலககோப்பை - இந்திய அணி அறிவிப்பு.. யாருக்கு வாய்ப்பு.. அட்டவணை - முழு விவரம்

மும்பை : 2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை டி20 தொடர் வரும் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது.இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த டி20 உலக கோப்பை நடப்பாண்டு இறுதியில் நடைபெற இருந்தது. எனினும் பிபா உலகக் கோப்பை கால்பந்து காரணமாக இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது.

கொரோனாவுக்கு முன்பு கடைசியாக நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது . மெல்போர்னில் நடைபெற்ற அந்த ஆட்டத்தை 90 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களித்தனர்.

17 பேர் அணி

17 பேர் அணி

கொரோனாவுக்கு முன்பு கடைசி விளையாட்டு தொடராக இது இருந்தது. தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹர்மன்பிரித் கவுர் தலைமையிலான மகளிர் அணியில் 17 பேரும், கூடுதலாக மூன்று வீராங்கனைகளும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த டி20 அணியில் வேகப்பந்துவீச்சாளர் சிக்கா பாண்டே இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

சீக்கா பாண்டே கடைசியாக 2020 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். உள்ளூர் போட்டியில் 7 டி20 ஆட்டத்தில் விளையாடி 11 விக்கெட்டுகளை சீக்கா பாண்டே வீழ்த்தி இருக்கிறார் .பூஜா வாஸ்திராக்கர் உலகக் கோப்பை அணியில் அறிவிக்கப்பட்டாலும் உடல் தகுதி பெற்றால் தான் அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகப் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடைபெறுவதால் ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வாணி, ஆகிய இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய மேக்னா சிங் ஒரு விக்கெட்டை கூட அந்த தொடரில் எடுக்காததால் தற்போது ரிசர்வ் வீராங்கனையாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா ரொட்ரிகியூஸ், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராஜேஸ்வரி கெய்க்வாட், ராதா யாதவ் போன்ற வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

யாருடன் மோதல்?

யாருடன் மோதல்?

இந்த தொடரில் இந்திய அணி குரூப் பி பிரிவில் இடம் பெற்றிருக்கிறது இந்திய அணியுடன் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து உள்ளிட்ட பலமான அணிகளும் விளையாடுகின்றன.இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த தொடருக்கு முன்பாக இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சென்று முத்தரப்பு t20 தொடரில் விளையாடுகிறது ஜனவரி மாதம் நடைபெறும் இந்த தொடர் t20 உலக கோப்பைக்கு நல்ல பயிற்சி காலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மகளிர் அணி விவரம்

இந்திய மகளிர் அணி விவரம்

ஹர்மன்பிரித் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரொட்ரிகியூஸ், செஃபாலி வர்மா, ஹர்லின் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா,ராஜேஸ்வரி கெய்க்வாட், ராதா யாதவ், ரேனுகா தாக்கூர், மேக்னா சிங், அஞ்சலி சர்வாணி, பூஜா வஸ்தர்கார், ஷிகா பாண்டே

Story first published: Wednesday, December 28, 2022, 22:44 [IST]
Other articles published on Dec 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+