For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை.. இந்தியாவின் கனவு நனவாகுமா? எந்த சேனல், எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

துபாய்: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியுடன் ஷார்ஜாவில் தொடங்கவுள்ளது. இந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை எந்த சேனல், எந்த ஓடிடியில் பார்க்கலாம் உள்ளிட்ட அனைத்து விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ஐசிசி டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று 4 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடங்கியுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை வங்கதேசத்தில் நடப்பதாக இருந்த நிலையில், அங்கு நடந்த உள்நாட்டு அரசியல் பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

womens t20 world cup 2024 t20 world cup smriti mandhana 20 2024

இன்று நடக்கவுள்ள முதல் போட்டியில் தொடரை நடத்தும் நாடான வங்கதேச அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி களமிறங்கவுள்ளது. மொத்தமாக 10 அணிகள் இந்த டி20 உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ளன. 10 அணிகள் இரு குரூப்-களாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. குரூப் ஏ-வில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இருக்கின்றன.

குரூப் பி-யில் வங்கதேசம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்த டி20 உலகக்கோப்பை தொடர் 18 நாட்கள் நடக்கவுள்ள நிலையில், இறுதிப்போட்டி அக்.20ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 23 போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில், இந்திய அணி ஐசிசி கோப்பையை முதல்முறையாக வெல்ல தீவிரமாக உள்ளது.

இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து 4வது முறையாக டி20 உலகக்கோப்பையை வெல்ல தீவிரமாக உள்ளது. அதேபோல் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆசிய சாம்பியனான இலங்கை அணிகளும் கடுமையான சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளதால், இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் முதல்முறையாக ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகையே மகளிர் டி20 உலகக்கோப்பைக்கும் வழங்கப்படவுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி ஐசிசி இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக மட்டும் ரூ.19.64 கோடி அளிக்கப்படவுள்ளது.

இது கடந்த டி20 உலகக்கோப்பையை காட்டிலும் சுமார் 134 மடங்கு அதிகமாகும். இந்திய அணியை பொறுத்தவரை தங்களின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து நாளை விளையாடவுள்ளது. இந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்படவுள்ளது. அதேபோல் ஓடிடியை பொறுத்தவரை டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையில் பார்க்கலாம்.

Story first published: Thursday, October 3, 2024, 8:29 [IST]
Other articles published on Oct 3, 2024
English summary
ICC Women's T20 World Cup 2024: When and Where to Watch the Live Streaming of the Matches and Schedule
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+