Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் டி20 உலககோப்பை - தொடர்ந்து இந்தியாவுக்கு 2வது வெற்றி.. அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்

கேப் டவுன்: மகளிர் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்திய அணி வீராங்கனைகள் களமிறங்கினர். முதல் போட்டியில் காயம் காரணமாக களமிறங்காத ஸ்மிருதி மந்தானா, இன்றைய ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹாலி மேத்தீவ்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சரிவிலிருந்து மீண்டது

சரிவிலிருந்து மீண்டது

இதனையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டாபினி டைலர் மற்றும் கேம்ப்பேள் இணைந்து பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஸ்டாபினி டைலர் 42 ரன்களும்ம் கேம்பள் 30 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 75 ரன்கள் சேர்த்தது.

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

ஆனால், அதன் பிறகு களமிறங்கிய வீராங்கனைகள், இந்திய பந்துவீச்சாளர்களின் நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக ரேனுகா மற்றும் தீப்தி ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டை சாய்த்தனர். இதனால் 20 ஓல=வர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 118 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

ஸ்மிருதி மந்தானா பேட்டிங்

ஸ்மிருதி மந்தானா பேட்டிங்

119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய களிர் அணியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அதிக தொகைக்கு சென்ற ஸ்மிருதி மந்தானா 7 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே சேர்த்தார். செஃபாலி வர்மா 28 ரன்களில் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெமிமா ரோட்ரிகியூஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இதனையடுத்து கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 33 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி வரை நின்ற ரிச்சா கோஸ் 44 ரன்கள் சேர்க்க இந்திய அணி தற்போது 18.1 ஓவரில் 119 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பெற்றது. 2 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தை இந்தியா எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இதில் ஒரு போட்டியில் வென்றால்கூட அரையிறுதி வாய்ப்ப்பு உறுதியாகி விடும்.

இந்த ஆட்டத்தில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

Story first published: Wednesday, February 15, 2023, 22:51 [IST]
Other articles published on Feb 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+