
ஆஸி. பேட்டிங்
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை ஹெலி, மற்றும் ரெக்கல் முதலில் பொறுமையாக விளையாடினர். புது பந்து ஸ்விங் ஆகும் என்பதால் ஆஸி வீராங்கனைகள் சமாளித்து விளையாட முதல் 10 ஓவரில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர், ஆஸ்திரேலிய வீராங்கனைகள் அதிரடியை காட்ட தொடங்கினர்.

சாதனை பார்ட்னர்ஷிப்
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 160 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹெலி, ரெக்கல் ஜோடி சாதனை படைத்தது. ரெக்கல் 68 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடி காட்டிய ஹெலி 138 பந்துகளில் 170 ரன்கள் விளாசினார். இதில் 26 பவுண்டரிகள் அடங்கும். இது மகளிர் உலககோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும்.

357 ரன்கள் குவிப்பு
பெத் மூனி அரைசதம் அடிக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்தது. 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் வீராங்கனைகளும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹேத்தர் நைட் 26 ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இங்கிலாந்து தோல்வி
இதனையடுத்து, நாட் சிவர் தனி ஆளாக நின்று போராடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 148 ரன்கள் விளாச, மற்ற வீராங்கனைகள் துணை நிற்காததால் இங்கிலாந்து மகளிர் அணி 43.4வது ஓவரில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி 7வது முறையாக மகளிர் உலககோப்பையை வென்று சாதனை படைத்தது. மகளிர் உலககோப்பை ஒரு தொடரில் 509 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய வீராங்கனை ஹெலி சாதனை படைத்தார்.


Click it and Unblock the Notifications











