Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு அடிச்சும் வீணா போச்சு.. திக்..திக்.. போட்டியில் ஆஸி. வெற்றி! 3வது தோல்வியை தழுவிய இந்தியா

ஆக்லாந்து: மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி வீராங்கனைகள் களமிறங்கினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தானா, 10 ரன்களில் ஆட்டமிழக்க, செஃபாலி வர்மா 12 ரன்களில் வெளியேறினார்.

மித்தாலி ராஜ்

மித்தாலி ராஜ்

இதனால் இந்திய அணி 28 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பின்னர் சரிவிலிருந்த இந்திய அணியை மித்தாலி ராஜ் மற்றும் யாஷ்திகா பாட்டியா ஆகியோர் இணைந்து மீட்டனர்.பொறுப்புடன் விளையாடிய மித்தாலி ராஜ், ஒருநாள் போட்டியில் 63வது அரைசதத்தை விளாசினார். யாஷ்திகா பாட்டியாவும் தன் பங்கிற்கு 59 ரன்கள் சேர்க்க இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது. மித்தாலி ராஜ் 68 ரன்களில் வெளியேறினார்.

277 ரன்கள்

277 ரன்கள்

இதன் பின்னர் ஹர்மன்பிரித் கவுர் களத்துக்கு வந்தார்.வழக்கம் போல் ஹர்மன்பிரித் கவுர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 47 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் பூஜா வஸ்ட்கர் 28 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 277 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது.

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய வீராங்கனை 121 ரன்கள் சேர்த்தனர். அலிசா ஹெலி 72 ரன்கள் சேர்க்க, ஹெனஸ் 43 ரன்களக்கு ஆட்டமிழந்தார்.

ஆஸி. வெற்றி

ஆஸி. வெற்றி

சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லெனிங் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய வீராங்கனைகள் கட்டுக்கோப்பாக பந்து வீசி நெருக்க தந்தனர். ஆனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஆஸதிரேலிய அணி 3 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது.

Story first published: Saturday, March 19, 2022, 14:57 [IST]
Other articles published on Mar 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+