Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

28 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த இந்தியா.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா..? இந்திய அணி அசத்தல் ஆட்டம்

ஆக்லாந்து: மகளிர் உலகக் கோப்பையில் இம்முறை தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய மகளிர் அணி மோதியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் சொற்ப ரன்களில் இந்தியா ஆட்டமிழந்தது.

இதனால் பெரிய இலக்கை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய வீராங்கனைகள் களமிறங்கினர். செஃபாலி வர்மா இந்திய அணிக்கு திரும்பினார்.

அதிர்ச்சி தொடக்கம்

அதிர்ச்சி தொடக்கம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தானா, 10 ரன்களில் ஆட்டமிழக்க, செஃபாலி வர்மா 12 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 28 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பின்னர் சரிவிலிருந்த இந்திய அணியை மித்தாலி ராஜ் மற்றும் யாஷ்திகா பாட்டியா ஆகியோர் இணைந்து மீட்டனர்.

63வது அரைசதம்

63வது அரைசதம்

பொறுப்புடன் விளையாடிய மித்தாலி ராஜ், ஒருநாள் போட்டியில் 63வது அரைசதத்தை விளாசினார். யாஷ்திகா பாட்டியாவும் தன் பங்கிற்கு 59 ரன்கள் சேர்க்க இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது. மித்தாலி ராஜ் 68 ரன்களில் வெளியேறினார். இதன் பின்னர் ஹர்மன்பிரித் கவுர் களத்துக்கு வந்தார்.

ஹர்மன்பிரித் அதிரடி

ஹர்மன்பிரித் அதிரடி

வழக்கம் போல் ஹர்மன்பிரித் கவுர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 47 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் பூஜா வஸ்ட்கர் 28 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 277 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது.

Recommended Video

Jhulan Goswami வீசிய வினோத Delivery! Womens Worldcup 2022ல் சம்பவம் | OneIndia Tamil
ஒரு ஓவரில் 12 பந்து

ஒரு ஓவரில் 12 பந்து

ஆஸ்திரேலிய அணி வீசிய 12வது ஓவரில் பெரி, 6 ஓயிடுகளை வீசினார். இதனால் அந்த ஓவரில் மட்டும் ஆஸ்திரேலியா 12 பந்துகளை வீசியது.இந்த நிலையில், இது பெரிய இலக்கு என்றாலும் ஆஸ்திரேலியா பலமான பேட்டிங்கை கொண்ட அணி, இந்தியா தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி கிட்டும்.

Story first published: Saturday, March 19, 2022, 10:33 [IST]
Other articles published on Mar 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+