
அதிரடி ஆட்டம்
கேப்டன் மித்தாலி ராஜ் 5 ரன்களிலும், தீப்தி சர்மா 15 ரன்களும் வெளியேறினார். இதனையடுத்து ஸ்மிருதி மந்தானாவுடன் ஜோடி சேர்ந்த ஹர்மன்பிரித் கவுர் , பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஒரு கட்டத்துக்கு பிறகு இருவரும் அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.

அடுத்தடுத்து சதம்
இருவரும் அடுத்தடுத்து சதம் விளாச, இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 123 ரன்கள் சேர்த்தார். ஹர்மன்பிரித் கவுர் 109 ரன்கள் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலககோப்பையில் 8 விக்கெட் 317 ரன்கள் சேர்த்தது.

நல்ல தொடக்கம்
318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் களமிறங்கினர். தொடக்க ஜோடி தோத்தின், மேத்தியூஸ் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது. தோத்தின் 62 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் சீட்டுக்கட்டு போல் சரிந்தது.

சரிந்த விக்கெட்டுகள்
அடுத்த 34 ரன்கள் சேர்ப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. அனிஷா விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் கோஸ்வாமி, உலககோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். 40வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 162 ரன்களுக்கு சுருண்டது.


Click it and Unblock the Notifications











