Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படி தோற்றோம் என்றே தெரியல..கடைசி 5 ஓவரில் எல்லாம் மாறிவிட்டது! இந்திய மகளிர் கேப்டன் ஹர்மன்பிரித்

இந்தூர்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது பரிதாபமான நிலையில் இருக்கின்றது. இந்த ஊரில் நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை செய்தது.

இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி நல்ல தொடக்கத்தை பெற்று அபாரமாக விளையாடி வந்தது. ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 36 ரன்கள் அடிக்க வேண்டும்.

Harmanpreet Kaur

கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்த நிலையில் இந்தியாவின் வெற்றி உறுதி என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் யாருமே நினைக்காத வகையில் ஆட்டம் தலைக்கீழ் மாறி இங்கிலாந்து அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் ஆட்டம் இழந்தது.

போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டது. இருப்பினும் எங்கள் அணியில் நிறைய பேர்கள் இருந்தார்கள். ஆனால் எப்படி நாங்கள் தோற்றோம் என்று எனக்கே தெரியவில்லை. இங்கிலாந்து அணிக்கு தான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து வீராங்கனைகள் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து அபாரமாக பந்து வீசி விக்கெட்டை எடுத்தார்கள்.

உண்மையிலேயே மனது கஷ்டமாக இருக்கின்றது. அவ்வளவு உழைத்தும் கடின உழைப்பை போட்டும் கடைசி ஐந்து, ஆறு ஓவர்களில் எங்களால் வெற்றியை பெற முடியவில்லை. நாங்கள் போட்ட பிளானுக்கு மாறுதலாக கடைசி ஓவர்களில் நடந்து விட்டது. இது உண்மையிலேயே எங்களின் இதயத்தை நொறுக்கி விட்டது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை தான் விளையாடி வருகின்றோம்.

தோல்வியை நாங்கள் எளிதில் ஒப்புக் கொள்வது கிடையாது. எனினும் நாங்கள் வெற்றி கோட்டை தாண்டுவதும் இல்லை. கடைசி மூன்று போட்டிகளில் நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடியும் தோல்வியை தருகி இருக்கின்றோம். அடுத்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எங்களுடைய பவுலர்கள் நல்ல பணியை செய்திருக்கிறார்கள். இங்கிலாந்து வீராங்கனைகள் பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது.

இந்த போட்டியில் பெரும்பான்மையான விஷயங்களில் நாங்கள் சரியாகவே செயல்பட்டு இருக்கிறோம். கடைசி ஐந்து ஓவர்கள் குறித்து நாங்கள் மீண்டும் யோசிக்க வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, October 20, 2025, 10:22 [IST]
Other articles published on Oct 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+