ஐசிசி மகளிர் உலககோப்பை.. அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி.. நியூசிலாந்து அணி தோல்வி
நவி மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
முதல் விக்கெட்டுக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தானா அதிரடி காட்டி 212 ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து வீராங்கனைகள் தடுமாறினர். பிரமாதமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 95 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று பிரதிகா ராவல் 134 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தார்.

இதில் 13 பவுண்டரிகளும்,இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று ஜெமிமா இறுதியில் 11 பௌண்டரிகளை அடித்து 55 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 11 பௌண்டரிகளை அடித்து 55 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹர்மன் பிரித் கவுர் 10 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய மகளிர் அணி 49 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்தது. மழை குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 44 ஓவர்களில் 325 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
இதனை அடுத்து நியூசிலாந்து மகளிர் அணி தங்களுடைய இன்னிங்சை தொடங்கியது. இதில் தொடக்க வீராங்கனை சுசி பைட்ஸ் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தது. மற்றொரு தொடக்க வீராங்கனை ஜார்ஜியா 30 ரன்களிலும், அமீலா கெர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சோபி டிவைன் 6 ரன்களில் வெளியேற புரூக் ஹாலிடே 81 ரன்கள் எடுத்தனர். இசாபெல் 65 ரன்களில் எடுக்க 44 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications