Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி மகளிர் உலககோப்பை புள்ளி பட்டியல்.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கா?

மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணிகளும் லீக் சுற்றில் 7 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். இதில் அனைத்து அணிகளும் ஐந்து ஆட்டங்களில் விளையாடி முடித்துவிட்டது. அந்த வகையில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்குச் செல்லும்.

இதில் தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. தற்போது நான்காவது இடத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

ICC Womens World cup 2025

இதில் இது அணிகளும் தலா 5 போட்டிகள் விளையாடி நான்கு புள்ளிகளுடன் உள்ளது. ஆனால் இந்தியாவின் ரன் ரேட் 0.52 என்று அளவில் நியூசிலாந்து அணி ரன் ரேட் மைனஸ் 0.24 என்ற அளவில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்தியா இன்னும் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாட வேண்டும். இதில் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்று விடலாம். ஒருவேளை நியூசிலாந்திடம் தோல்வி அடையும் இந்தியா, வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில் நியூசிலாந்து அணி கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் தோல்வியை தழுவ வேண்டும்.

இப்படி நடந்தால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்று விடலாம். ஒருவேளை நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று வங்கதேசத்துக்கு எதிராக தோல்வியை தழுவினால் நியூசிலாந்து இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை இந்தியா இரண்டு லீக் ஆட்டங்களிலும் தோல்வியை தழுவினால் நியூசிலாந்து அணி, அரையிறுதிக்கு சென்று விடும். இதனால் தற்போது இந்தியா ஒரு இக்கட்டான நிலையில் சிக்கிருகிறது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் கூட வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வென்றால் போதும் என்ற நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 20, 2025, 13:21 [IST]
Other articles published on Oct 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+