Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி மகளிர் உலககோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பு.. இம்முறை கோப்பை நமக்கு தான்.. விவரம்

மும்பை: ஐசிசி மகளிருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் நவம்பர் இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்க உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கு பெறுகிறது.

முதல் சுற்று ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெறும். இதில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையின் நடத்தப்படும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டி கொழும்பு நகரில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

India Women squad for World cup

ஹர்மன்பிரித் தலைமையிலான இந்திய மகளிர் அணியில் 15 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சாளர் ரேணுகா சிங் மற்றும் அமன்ஜோத் கவுர் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு வந்து அணிக்கு திரும்பிருக்கின்றார்கள். இதுபோன்ற நட்சத்திர வீராங்கனை செபாலி வர்மா உலககோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தானா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த இரண்டு வீராங்கனைகளும் இணைந்து 250 ஒரு நாள் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருப்பதால், இந்த தொடரில் கோலி, ரோஹித் சர்மா போல் மகளிர் கிரிக்கெட்டில் மிகவும் முக்கிய பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று ஜெமிமா ரோட்டரிக்யூஸ், தீப்தி சர்மா பிராத்திகா ராவல், கிராந்தி காட், ஸ்ரீ சரணி போன்ற அடுத்த தலைமுறைக்கான வீராங்கனைகளும் இடம் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக பிராத்திக்கா ராவல், கடந்த டிசம்பர் மாதம் அறிமுகமாகிய நிலையில் இதுவரை 14 இன்னிங்ஸில் 703 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இதைப் போன்று கிராந்தி காட் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதே போன்று விக்கெட் கீப்பர் வீராங்கனைகளாக ரிச்சா கோஸ் மற்றும் யாஸ்திகா பாட்டியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சுழற் பந்துவீச்சு படையில் தீப்தி ஷர்மா, சினே ரனா, ராதா யாதவ்,ஸ்ரீ சரணி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ சரணி கடந்த ஏப்ரல் மாதம் தான் அறிமுகமான நிலையில் 8 போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதால் அவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்திருக்கின்றது.

இந்திய அணி இம்முறை உலகக் கோப்பை வெல்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இருக்கும் வகையில் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய மகளிர் அணி தங்களுடைய முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடுகிறது. இந்த தொடருக்கு பயிற்சி களமாக அமைய வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த , வரும் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது.

இந்திய மகளிர் அணி விவரம்: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் டியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ், கிராந்தி கவுட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், என். ஸ்ரீ சரணி, யாஸ்டிகா பாட்டியா, ஸ்னேஹ் ராணா

Story first published: Tuesday, August 19, 2025, 19:40 [IST]
Other articles published on Aug 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+