ஐசிசி மகளிர் உலககோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை
மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்று இருக்கிறது. நடப்புச் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை அரை இறுதியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி சரித்திரம் படைத்திருக்கிறது.
நவி மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் தேர்வு செய்தது. இதில் தொடக்க வீராங்கனை போபே லிச்சி ஃபீல்டு 93 பந்துகளில் 119 ரன்களும், எலிஸ்ஸி பெர்ரி 88 பந்துகளில் 77 ரன்களும் எடுத்தனர்.

இதேபோன்று இறுதியில் ஆஸ்லிக் கார்ட்னர் 45 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணி 49.5 ஓவரில் 338 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ஸ்ரீ சரணி இரண்டு விக்கெட்டுகளையும் தீபதி சர்மா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனை அடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு உடன் இந்திய வீராங்கனைகள் களமிறங்கினர். செபாலி வர்மா ஐந்து பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, ஸ்மிருதி மந்தானா 24 ரன்களில் வெளியேறினார். இந்த நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெமிமா மற்றும் ஹர்மன் பிரித் கவுர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இதில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் பத்து பவுண்டரி இரண்டு சிக்சர் என 88 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதேபோன்று நடுவரிசையில் தீப்தி சர்மா 24 ரன்களும், ரிச்சா கவுஸ் 26 ரன்களும் எடுக்க மூன்றாவது வீராங்கனையாக விளையாடிய ஜெமிமா மட்டும் அதிரடி காட்டினார். அவருடைய விக்கெட்டை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தடுமாறினர்.
இதன் மூலம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 134 பந்துகளில் 127 ரன்களை ஜெமிமா அடித்தார். இதில் 14 பௌண்டரிகள் அடங்கும். இதனால் 48.3 ஓவரில் இந்திய அணி ஐந்து விக்கட்டுகள் இழந்து 341 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. இதன் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி தென்னாப்பிரிக்காவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications