ஐசிசி மகளிர் உலககோப்பை அரையிறுதி: இந்தியா, ஆஸ்திரேலியா போட்டி எங்கு பார்ப்பது? நேருக்கு நேர் விவரம்
மும்பை: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் வியாழக்கிழமை மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வரும் நவம்பர் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுடன் பல பரிட்சை நடத்துவார்கள்.
நடப்பு உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் பலமான அணியாக விளங்குகிறது. மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டை பொருத்தவரை, இது அணிகளும் 60 முறை பல பரிட்சை நடத்திருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா 49 முறையும், இந்தியா 11 முறையும் வெற்றியை பெற்றிருக்கிறது.

உலகக்கோப்பை 50 ஓவர் வரலாற்றில் இந்தியா மகளிர் அணியும், ஆஸ்திரேலியா மகளிர் அணியும் 14 முறை மோதி இருக்கிறார்கள். இதில் வெறும் இந்தியா மூன்று முறை மட்டும் தான் வென்றிருக்கிறது. நடப்பு உலக கோப்பை தொடரில் குரூப் பிரிவில் இரு அணிகளும் மோதியபோது இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 330 ரன்கள் குவித்தது.
இதில் தொடக்க வீராங்கனைகள் 155 ரன்கள் சேர்த்தனர். ஆனால் ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்த இலக்கை எளிதில் எட்டி வென்றது. என்னும் 2017 உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இதேபோல் இந்தியாவும் ஆஸ்திரேலியா அணியும் பலப்பரிட்சை நடத்தியது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஆன ஹர்மன்பிரீத் 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினார். நாளைய போட்டியில் கூட ஆஸ்திரேலியா வெல்வதற்கே வாய்ப்பு அதிகம்.
மேலும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஆன பிரதிகா ராவல் காயம் காரணமாக அரையிறுதியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டி தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டாரிலும் பார்க்கலாம். இந்தப் போட்டிக்காக நவி மும்பை மைதானத்தில் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications