Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி மகளிர் உலககோப்பை புள்ளி பட்டியல்.. இந்திய அணிக்கு எந்த இடம் தெரியுமா?

மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்று நான்கு புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி ரன்டேட்டில் 1.51 என்ற அளவில் இருக்கின்றது.

இதன் காரணமாக புள்ளி பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் 3 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

ICC Womens World cup 2025

ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் 1.78 என்ற அளவில் உள்ளது. மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இங்கிலாந்து அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 3.77 என்ற நிலையில் உள்ளது. நான்காவது இடத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் வங்கதேசம் உள்ளது.

விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் உடன் ரன் ரேட் 1.62 என்ற அளவில் உள்ளது. ஐந்தாவது இடத்தில் இலங்கை அணி உள்ளது. விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வி ஒரு போட்டியில் மழை காரணமாக ரத்தானதால் ஒரு புள்ளியுடன் உள்ளது. பாகிஸ்தான் அணி 6வது இடத்திலும், நியூசிலாந்து அணி ஏழாவது இடத்திலும் தென்னாபிரிக்க அணி எட்டாவது இடத்திலும் புள்ளிகள் எதுவும் இன்றி உள்ளன.

அடுத்ததாக இந்திய அணி மூன்று முக்கியமான போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த மூன்றில் இரண்டில் வென்றாலே இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என அடுத்தடுத்து மூன்று பெரிய போட்டிகள் இந்திய மகளிர் அணிக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி இறுதிச் சுற்றுக்கு செல்லும்.

Story first published: Sunday, October 5, 2025, 23:59 [IST]
Other articles published on Oct 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+