Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி மகளிர் உலககோப்பை.. 330 ரன்கள் குவித்தும் இந்தியா தோல்வி.. மாஸ் காட்டிய ஆஸ்திரேலியா

விசாகப்பட்டினம்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 13 வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 330 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவி இருக்கிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் 75 ரன்களும், ஸ்மிருதி மந்தானா 66 பந்துகளின் 80 ரன்களும் குவித்தனர்.

ICC Womens World cup

நடுவரிசை வீராங்கனை ஹார்லின் டியோல் 38 ரன்களும், ஹர்மன்பிரித் கவுர் 22 ரன்களும், ஜெமிமா 33 ரன்களும், ரிச்சா கவுஸ் 32 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததார். இந்திய மகளிர் அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலிசா ஹெலி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

அவருக்கு மற்றொரு தொடக்க வீராங்கனையான போபே 40 ரன்கள் எடுத்து நல்ல கம்பெனி கொடுத்தார். இதைப் போன்று எலிசா பெர்ரி 47 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் கேப்டன் அலிசா ஹைலி அதிரடி காட்டி ரன்களை சேர்த்தார். 84 பந்துகளில் சதம் அடித்த அவர் அடுத்த 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

மொத்தமாக 107 பந்துகளை எதிர்கொண்ட அவர் 142 ரன்கள் எடுத்தார். இதில் 21 பவுண்டரி, மூன்று சிக்ஸர் அடங்கும். இதே போன்ற நடுவரிசையில் கார்ட்னர் 45 ரன்கள் எடுக்க கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்ற எலிஸ் பெர்ரீ 47 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 49 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது.

இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளும், தீப்தி சர்மா, அமஞ்சோத் கவுர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 330 ரன்கள் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை சோகம் அடைய வைத்திருக்கிறது.

Story first published: Sunday, October 12, 2025, 23:56 [IST]
Other articles published on Oct 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+