For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விறுவிறுப்பான கட்டத்தில் மகளிர் உலககோப்பை- அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா.. வழிகள் என்ன?

மும்பை: மகளிர் உலகக் கோப்பை தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் மோதும் இந்த தொடரில் முதல் 4 இடத்தை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

இன்று வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி, வங்கதேசத்தை 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 6 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்தில் உள்ளது. தோல்வியே தழுவாத ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.

ICC Womens World cup – Here is the chances for India to qualify for semi

2வது இடத்தில் யாரும் எதிர்பாராத வகையில் தென்னாப்பிரிக்க அணியும், 4வது இடத்தில் அதே 6 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் உள்ளது. இங்கிலாந்த மற்றும் நியூசிலாந்து அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் முறையே 5வத மற்றும் 6வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது.

அதில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். ஆனால் அந்த போட்டியில் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பு உள்ளத. அதற்கு வியாழக்கிழமை நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தென்னாப்பிரிக்கா குறைந்த ரன் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். அப்படி தோற்கும் பட்சத்தில் அதிக ரன் ரேட் காரணமாக இந்தியா முன்னேறிவிடும்.

ஒருவேலை, தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தினால், இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் அட்டம் கிட்டதட்ட நாக் அவுட் போட்டி போல் மாறிவிடும். ஒருவேலை அந்த போட்டியில் இந்தியா தோற்றால் நியூசிலாந்து இறதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். ஆனால் இந்திய அணி வீராங்கனைகள், தங்களது தலைவிதியை மற்ற அணியிடம் கொடுக்காமல் தாங்களே தீர்மானித்து கொள்ளும் உத்வேகத்துடன் உள்ளனர்.

Story first published: Tuesday, March 22, 2022, 17:00 [IST]
Other articles published on Mar 22, 2022
English summary
ICC Womens World cup – Here is the chances for India to qualify for semi விறுவிறுப்பான கட்டத்தில் மகளிர் உலககோப்பை- அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா.. வழிகள் என்ன?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+