Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி மகளிர் உலககோப்பை புள்ளி பட்டியல்.. இந்திய அணி இடம் என்ன? கடினமாகும் அரையிறுதி வாய்ப்பு

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்க அணி திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி ஆரம்பத்தில் தடுமாறியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு எதிராக அபாரமாக விளையாடிய டி கிளர்க் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

ICC Womens World cup

இந்த நிலையில் மகளிர் உலகக்கோப்பை தொடரில் புள்ளி பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றியை பெற்று 7 புள்ளிகள் உடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் உள்ளது.

விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தற்போது 6 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி மூன்று வெற்றி ,ஒரு தோல்வி என ஆறு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி 2 வெற்றி, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், நியூசிலாந்து அணி ஒரு வெற்றி, இரண்டு தோல்வி என 2 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், வங்கதேச அணி ஒரு வெற்றி, மூன்று தோல்வி என இரண்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளது.

ஒரு புள்ளியுடன் இலங்கை ஏழாவது இடத்திலும், புள்ளிகள் எதுவும் இன்றி பாகிஸ்தான் எட்டாவது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணியே அரை இறுதிக்கு செல்ல முடியும். தற்போது இந்தியா நான்காவது இடத்தில் உள்ள நிலையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து எதிரான லீக் ஆட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் இரண்டிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

Story first published: Monday, October 13, 2025, 23:59 [IST]
Other articles published on Oct 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+