Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலில் விழ வந்த ஹர்மன்பிரித்.. ஜெய்ஷா கொடுத்த நியாக்சன்.. மகளிர் உலககோப்பை பரிசளிக்கும் விழாவில் சுவாரஸ்யம்

மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன் அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் செபாலி வர்மா அதிகபட்சமாக 87 ரன்கள் எடுக்க 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்திருந்தது. இதை அடுத்து தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் விளையாடியது. ஆனால் அந்த அணி 45.3 ஓவரில் 246 ரன்களில் ஆட்டம் இழந்தது.

World cup final

இதன் மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை இந்திய வீராங்கனைகள் மைதானத்தில் ஒருவரை ஒருவர் கட்டி அனைத்து உற்சாகமாக கொண்டாடினர். இதன்பின் உலகக்கோப்பை பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஐசிசி தலைவர் ஜெய்ஷா, கோப்பையுடன் நிற்க ஹர்மன்பிரித் பரிசுகோப்பையை வாங்க செல்லும்போது திடீரென்று ஜெயிஷாவின் காலில் தொட்டு ஆசீர்வாதம் வாங்க முயற்சி செய்தார்.

ஆனால் இதை எதிர்பார்க்காத ஜெயிஷா உடனே ஹர்மன்பிரீத்தை தடுத்து நிறுத்தி இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என்று கூறினார். இதனை அடுத்து கோப்பையை ஹார்மன்பிரித் பெற்றுக் கொண்டு தங்களது வீராங்கனைகளுடன் கொண்டாடினார். ஹர்மன்பிரித் இவ்வளவு பெரிய சாதனை செய்துவிட்டு பெண்கள் கிரிக்கெட்டிற்கு ஒரு முக்கிய தூணாக விளங்கி காலில் ஏன் விழுந்தார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கு ஒரு சிலர் ஜெயிஷா பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்ற பின் தான் மகளிர் கிரிக்கெட்டுக்கு பல முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஆண்களுக்கு நிகராக மகளிருக்கும் ஊதியம், ஆண்களை போல் மகளிருக்கும் ஐபிஎல் தொடர் என பல முயற்சிகளை ஜெயிஷா செய்தார். அதற்கு இந்திய கலாச்சாரப்படி நன்றி தெரிவிக்கும் விதமாக தான் அவர் காலில் விழ முயற்சி செய்தார் என்றும் எனினும் ஜெய்ஷா அதனை தடுத்து விட்டார் என்றும் கூறியுள்ளனர்.

Story first published: Monday, November 3, 2025, 1:26 [IST]
Other articles published on Nov 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+