Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்பார்க்காத தோல்வி இது.. இனி அடுத்த உலககோப்பையில் இருக்க மாட்டேன்.. ஆஸி. மகளிர் கேப்டன்

மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹெலி, இந்த போட்டி மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால் இந்த தோல்விக்கு நாங்கள் தான் காரணம் எங்களுடைய அணியின் பேட்டிங்கை நாங்கள் சிறப்பாக முடிக்கவில்லை.

Alyssa Healy

இதே போல் எங்களுடைய பந்துவீச்சும் சிறப்பாக இல்லை. சில கேட்ச்களையும் நாங்கள் தவறவிட்டோம். இதன் காரணமாக இந்தியவால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். இந்த இலக்கை நிர்ணித்த போது பாதி வேலை முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன். கூடுதலாக சில ரன்ளை அடித்திருக்க வேண்டும்.

நாங்கள் பந்துவீச்சு திட்டத்தில் சரியாகத்தான் இருந்தோம். எங்களுடைய வாய்ப்பை உருவாக்கினோம். நாங்கள் ஆட்டத்தில் இருந்தும். ஆனால் இந்தியா வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டார்கள். நெருக்கடியான சமயத்தில் அபாரமாக பேட்டிங் செய்து வெற்றியை தாண்டி விட்டார்கள். தோல்வி அடைந்து பேசும் இடத்தில் நான் இருப்பது கொஞ்சம் வினோதமாக தான் இருக்கின்றது.

அடுத்த தலைமுறை வீராங்கனைகள் அபாரமாக இருக்கின்றார்கள். இனி அடுத்த உலக கோப்பை நோக்கி திட்டங்களை தீட்ட வேண்டியது தான். அடுத்த உலகக்கோப்பை நிச்சயம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் கண்டிப்பாக அடுத்த உலகக் கோப்பையில் நான் விளையாட மாட்டேன். அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மகளிர் அணியில் பல மாற்றங்கள் நிச்சயம் நிகழும்.

இந்த தொடரில் எங்கள் அணில் வீராங்கனைகள் பலரும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இறுதியில் தோல்வியை தழுவியது மிகவும் ஏமாற்றமாக இருக்கின்றது. பல வாய்ப்புகளை உருவாக்கினோம். ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை. அதற்கு நானும் ஒரு காரணம் என்று தான் சொல்வேன். மகளிர் கிரிக்கெட் விளையாடுவதில் எங்களுக்கு பெருமை . ஆனால் இந்த போட்டியில் தோல்விக்கு நாங்கள்தான் காரணம்.

கண்டிப்பாக எங்கள் தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம். நாங்கள் கடந்த சில காலமாக யாருமே நம்ப முடியாத அளவுக்கு சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வந்தோம். ஆனால் நாக் அவுட் போட்டிகளில் நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் யார் வேண்டுமானாலும், உங்களை உயர்த்தி விடலாம். இந்த தோல்வி நிச்சயம். எனக்கு வலியை தரும் நாங்கள். ஒரு அணியாக நிச்சயம் வளர்வோம். நிச்சயம் சிறந்து விளங்குவோம் என்று அலிசா ஹெலி தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, October 30, 2025, 23:59 [IST]
Other articles published on Oct 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+