மகளிர் உலககோப்பை அரையிறுதி.. இந்தியாவுக்கு இமாலய இலக்கு.. ஆஸ்திரேலிய மகளிர் அணி அபாரம்
மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு 339 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய மகளிர் அணி நிர்ணயித்திருக்கிறது. நவி மும்பையில் நடைபெற்ற இரண்டாவது அறையறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனை கேப்டன் அலிசா ஹெலி 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த போபே லிச்சிபில்ட் மற்றும் எலைஸ் பெர்ரி ஆகியோர் அபாரமாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய எலைஸ் பெர்ரி 77 ரன்களில் ஆட்டம் இழக்க போபி லிச்சிபீல்ட் 93 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார். இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க பெத் முனி 24 ரன்களிலும், அன்னாபெல் சதர்லாந்து மூன்று ரன்களிலும் வெளியேறினர்.
இதனால் இந்திய அணிக்கு நம்பிக்கை பிறந்தது. எனினும் நடு வரிசையில் விளையாடிய ஆஸ்லிக் கார்னர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சிக்ஸர், 4 பவுண்டரி என 45 பந்துகளில் அவர் 63 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் விண்ணை தொட்டது. இதேபோன்று தகிலா மெக்ராத் 12 ரன்களிலும். கிம் கார்த் 17 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்ங்கனைகள் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணி 49.5 ஓவரில் 338 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய பந்துவீச்சு தரப்பில் ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 339 ரன்கள் இலக்கு என்பது சவாலானது என்பதால், இந்தியா பைனலுகிகு செல்லுமா என்ற கலக்கம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால், ஸ்மிருதி மந்தானா, ஹர்மன்பிரித் கவுர், ஜெமிமா ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications