Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாளை முதல் மோதல்.... சம பலத்துடன் சமருக்குத் தயாராகும் நியூசிலாந்து-இலங்கை - வெற்றி யாருக்கு?

கிறைஸ்ட்சர்ச்: உலக கோப்பையின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் நாளை பலப்பரிட்சை நடத்த உள்ளன. இரு அணிகளின் மோதல் குறித்த ஒரு பார்வை.

நடப்பு உலக கோப்பை தொடரை இணைந்து நடத்தும் நாடுகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவாகும். முதல் போட்டி நாளை காலை இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்குகிறது.

நியூசிலாந்து அணி விவரம்:

நியூசிலாந்து அணி விவரம்:

பிரெண்டன் மெக்கல்லம் (கேப்டன்), கோரி அன்டர்சன், டிரென்ட் போல்ட், கிரான்ட் எல்லியட், மார்டின் குப்தில், டாம் லதாம், மிட்சேல் மெக்லெனாகன், நேத்தன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ஆடம் மில்னே, லூக் ரோன்சி (விக்கெட் கீப்பர்), டிம் சவுத்தி, ரோஸ் டெய்லர், டேனியல் வெட்டோரி, கனே வில்லியம்சன். பயிற்சியாளர்: மைக் ஹேசன்.

இலங்கை அணி விவரம்:

இலங்கை அணி விவரம்:

ஆங்லோ மேத்யூஸ் (கேப்டன்), திரிமனே, திலகரத்னே தில்ஷன், குமார் சங்கக்காரா (விக்கெட் கீப்பர்), மகேலா ஜெயவர்த்தனே, தினேஷ் சந்திமால் (விக்கெட் கீப்பர்-உபரி), திமுத் கருணரத்னே, ஜீவன் மென்டிஸ், திசாரா பெரேரா, சுரங்க லக்மல், லதிஷ் மலிங்கா, துஷ்மந்தா சமீரா, நுவான் குலசேகரா, ரங்கனா ஹீரத், சசித்ரா சேனநாயகே. பயிற்சியாளர்: மார்வன் அட்டபட்டு.

மோதல் எப்படி?

மோதல் எப்படி?

நியூசிலாந்தும், இலங்கையும் இதுவரை 89 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து 41 போட்டிகளிலும், இலங்கை 40 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் இருந்தே இரு அணிகளும் சமபலம் பெற்றவை என்பதை புரிந்து கொள்ளலாம். ஒரு போட்டி டையில் முடிந்தது. ஏழு போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.

பிரிவு ஏ

பிரிவு ஏ

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

உலக கோப்பையில் எப்படி?

உலக கோப்பையில் எப்படி?

2003 உலக கோப்பை போட்டித் தொடரில் இருந்து இதுவரை ஐந்து முறை இவ்விரு அணிகளும் உலக கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 5 போட்டிகளிலுமே இலங்கைதான் வெற்றி பெற்றுள்ளது. 2003ல் ஒரு முறையும், 2007 மற்றும் 2011 உலக கோப்பைகளில் தலா இருமுறையும் நியூசிலாந்தை இலங்கை வீழ்த்தியுள்ளது. ஆனால் இம்முறை சொந்த ஊரில் ஆடுவது நியூசிலாந்து வீரர்களுக்கு பலமாகும்.

அடித்தளம் ஸ்டிராங்

அடித்தளம் ஸ்டிராங்

இறுதி கட்ட ஓவர்களில் நியூசிலாந்து பேட்டிங், 2013ம் ஆண்டுக்கு பிறகு ஆதிக்கம் செலுத்துகிறது. 41 முதல் 50 ஓவர்களுக்கு இடைப்பட்ட நேரத்தில், நியூசிலாந்தின் சராசரி ரன் ரேட் 8.82 என்ற அளவில் உள்ளது. இதில் இரண்டாம் இடம் இந்தியாவுக்கு. இந்தியாவின் சராசரி ரன்ரேட் 7.88 ஆகும். ஆஸ்திரேலியா 7.87 ரன் ரேட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் இலங்கை 7.55 ரன் ரேட்டுடன் 7வது இடத்தில்தான் உள்ளது.

இலங்கையின் முக்கிய பவுலர்

இலங்கையின் முக்கிய பவுலர்

2014ல் ஒருநாள் போட்டிகளில், 38 விக்கெட்டுகளை குவித்து இலங்கையின் விக்கெட் டேக்கர் பவுலராக விளங்கிய அஜந்தா மென்டிஸ், உலக கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை. உலக கோப்பைக்கான இலங்கை அணியில் சேனநாயக்கேதான் கடந்த ஆண்டின் முன்னணி விக்கெட் டேக்கராக உள்ளார். அவர் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

Story first published: Friday, February 13, 2015, 11:14 [IST]
Other articles published on Feb 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+