Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு திரில் வெற்றி!

வெலிங்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து, 210 ரன்களை எடுத்திருந்த நிலையில், 2வது பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் கடைசி ஓவரில் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் டுனெடின் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் மோதின. டாசில் வென்ற ஆப்கன், முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 210 ரன்களை எடுத்தது. இதுதான் ஸ்காட்லாந்து உலக கோப்பை தொடரில் எடுத்த அதிகபட்ச ரன்னாகும்.

Afghanistan win a thriller against Scotland!

அந்த அணியின் மேட் மாச்சன் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். ஆப்கன் தரப்பில் சபூர் ஜட்ரான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 38 ரன்களை விட்டுக்கொடுத்தார். தவ்லத் ஜட்ரான், 29 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

[]

இதையடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 23.4 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிப்புக்கே சென்றது.

தொடக்க ஆட்டக்காரர் ஜாவீத் அகமதி 51 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்து அவுட் ஆன நிலையிலும், ஆப்கானிஸ்தான் மிடில் ஆர்டர் மொத்தமாக சொதப்பியதால் இந்த தடுமாற்றத்தை அந்த அணி சந்தித்தது.

ஆனால் ஒருமுனையில் சமியுல்லா சென்வாரி நங்கூரம் போட்டு ஆடி வந்ததால், ஆப்கானிஸ்தான் தப்பி பிழைத்து வந்தது. இருப்பினும் 46.5 ஓவர்களில் சமியுல்லா சென்வாரி ஒன்பதாவது விக்கெட்டாக, 96 ரன்களில் அவுட் ஆனபோது, அணி சற்று ஆடித்தான்போனது. எஞ்சிய ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்ற வேகத்தில் ஸ்காட்லாந்து பந்து வீச்சாளர்கள் மிரட்ட தொடங்கினர். ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹமீத் ஹசன் 15 ரன்களும், சாபூர் ஜட்ரான் 12 ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தை ஹசன் சிங்கிள் தட்டினார். 49.3 வது ஓவரில் வெற்றிக்கான பவுண்டரியை ஜட்ரான் அடிக்க ஆப்கானிஸ்தான் திரில் வெற்றியை சுவைத்தது.

Story first published: Thursday, February 26, 2015, 12:08 [IST]
Other articles published on Feb 26, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+