மெல்போர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மார்ச் 24-ந் தேதி முதல் மார்ச் 29-ந் தேதி வரை அரை இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன. .
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 3வது காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. முன்னதாக நடைபெற்ற 2 காலிறுதிகளில் இலங்கையை தென்னாப்பிரிக்காவும் வங்கதேசத்தை இந்தியாவும் வீழ்த்தி அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

ஆக்லாந்தில் மார்ச் 24-ந் தேதி செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் நியூசிலாந்து அல்லது மேற்கிந்திய தீவுகள் அணி மோத இருக்கிறது.
சிட்னியில் மார்ச் 26-ந் தேதி வியாழக்கிழமையன்று நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் அணிகளில் ஒன்று மோதும்.
இந்த இரு அரை இறுதிப் போட்டிகளிலும் வெல்லும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிகள் மார்ச் 29-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு மெல்போர்னில் நடைபெறும்.