Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாப்-10 பேட்ஸ்மேன்கள்!

சென்னை: வரும் 14ம்தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில், பல நாட்டு ரசிகர்களும் தங்களது ஃபேவரைட் ஹீரோ பேட்ஸ்மேன்கள் மீது ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை வைத்து காத்திருக்கின்றனர். இந்த உலக கோப்பையில் ஜொலிக்க வாய்ப்புள்ள கிரிக்கெட் வீரர்களில் முக்கியமான பத்து பேரின் பெயர்களையும், அதற்கான காரணங்களையும் இப்போது பார்க்கலாம்.

ஏபிடி வில்லியர்ஸ்

ஏபிடி வில்லியர்ஸ்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ். டெஸ்ட் போட்டியிலும் 2வது ரேங்க் இவருக்கு என்பதில் இருந்து எத்தனை திறமையான மனிதர் என்பதை புரிந்துகொள்ள முடியும். தொடர்ந்து 78 டெஸ்ட் இன்னிங்சுகளில் டக்-அவுட் ஆகாத பேட்ஸ்மேன் என்ற சாதனையை நிகழ்த்தியவரும் ஏபிடி வில்லியர்ஸ்தான்.

உலக சாதனை

உலக சாதனை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, 31 பந்துகளில் சதம் அடித்து புதிய உலக சாதனையுடன் இவ்வாண்டை தொடங்கியுள்ள ஏபிடி வில்லியர்சை பார்த்தால் பந்து வீச்சாளர்களுக்கு தொடை நடுக்கம் ஏற்படுகிறதாம். தென் ஆப்பிரிக்க கேப்டனான ஏபிடி வில்லியர்ஸ் இந்த உலக கோப்பை போட்டியில் கலக்குவார் என நம்பலாம்.

விராட் கோஹ்லி

விராட் கோஹ்லி

டெஸ்ட் தொடரின்போது, ஆஸ்திரேலிய பிட்சுகளில் காட்டிய அதிரடி கோஹ்லி மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. கடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் கோஹ்லி அடித்த 35 ரன்கள்தான், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தவித்த நேரத்தில் பெரிதும் கை கொடுத்தது. 148 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கோஹ்லி, 21 சதங்கள் உதவியுடன், 6 ஆயிரம் ரன்களை கடந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி ரன் குவிப்பு 51.84 ஆகும். உலக கோப்பை தொடரில், சச்சின் இடத்தை நிரப்ப வாழ்த்துக்கள் கோஹ்லி.

வார்னர் கலக்கல்

வார்னர் கலக்கல்

ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் எத்தகைய பந்து வீச்சாளர்களையும் அச்சமின்றி துவம்சம் செய்ய கூடியவர். டெஸ்ட் போட்டிகளுக்கு லாயக்கு இல்லை என்று ஒதுக்கி வைத்திருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமே, இப்போது வார்னர் இல்லாமல் டெஸ்ட் ஆட முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளது. கவனிக்கத்தக்க பேட்ஸ்மேன்களில் வார்னரும் ஒருவர். கில்கிறிஸ்ட் இல்லாத குறையை இவர்தான் தீர்ப்பார் என்கின்றனர் ஆஸி.கள்.

உயர்ந்த மனிதர்

உயர்ந்த மனிதர்

கிறிஸ்கெய்ல் யாருன்னு கேட்டா.. சின்ன குழந்தையும் சொல்லும்.. என்று கிரிக்கெட் ரசிகர்கள் பாடும் அளவுக்கு இவர் பிரபலம். தூக்கத்தில் இருந்து அப்போதுதான் எழுந்து வந்தவர் போல முகத்தை வைத்திருந்தாலும், அடிக்கும் ஷாட் ஒவ்வொன்றும் எதிரணி கேப்டனின் தூக்கத்தை கெடுப்பவை. 2007 உலக கோப்பை டி20 போட்டியில் வலுவான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 57 பந்துகளில் 117 ரன்கள் குவித்து டி20 போட்டியில் முதல் சதம் அடித்து முத்திரை பதித்தவர் கெய்ல். இவரது அனாயாசமான சிக்சர்கள் உலக பிரசித்தி. பார்மில் இருந்தால் இவரை கட்டுப்படுத்துவது பெரும் பாடு.

மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்

ஐபிஎல் ஹீரோவான ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், மிடில் ஆர்டரில் புகுந்து அனைத்து ஆர்டர்களையும் நடுங்க செய்பவர். ஆஸி. உள்ளூர் அணியான தாஸ்மானியாவுக்கு எதிராக 19 பந்துகளில் 50 ரன்கள் குவித்து, உள்ளூர் போட்டிகளில் சாதனை படைத்தவர் மேக்ஸ்வெல். நல்ல ஃபீல்டர், ஆப்-ஸ்பின்னரும் கூட. சில நேரங்களில் மட்டமான பந்து வீச்சுகளில் அவுட் ஆகிவிடுவது இவரது பலவீனம்.

விக்கல் எடுக்க வைக்கும் மெக்கல்லம்

விக்கல் எடுக்க வைக்கும் மெக்கல்லம்

நியூசிலாந்தின் மெக்கல்லம், டாப்-ஆர்டரில் இருந்து லோவர்-ஆர்டர் வரை எங்கு களமிறக்கினாலும் ஒரே மாதிரி அதிரடி காண்பிக்க தெரிந்த வித்தகர். டி20 போட்டிகளில் இரு செஞ்சுரி அடித்த முதல் வீரர், 2000 ரன்களை டி20 போட்டிகளில் கடந்தவர் என்பது போன்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். தனிநபராக ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். இவர் தற்போது, உச்சகட்ட பார்மில் இருக்கிறார் என்ற தகவலே பிற அணிகளுக்கு விக்கலை ஏற்படுத்தும்.

ஸ்டீவன் ஸ்மித்

ஸ்டீவன் ஸ்மித்

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ஸ்மித், நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 769 ரன்களை குவித்து தொடரின் நாயகன் பட்டத்தை வென்றார். ஸ்பின்னராக அணிக்குள் வந்து இன்று பேட்டிங்கில் சாதித்து, கேப்டனாக உயர்ந்துள்ளார் என்றால் ஸ்மித்தை குறைத்து எடை போடக்கூடாது என்பது புரியும்.

டேவிட் மில்லர்

டேவிட் மில்லர்

தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர், பேக்ஃபுட், பிரண்ட் ஃபுட் என இரு வகைகளிலும் சிறப்பாக ஆடக்கூடியவர். 2013 ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்கு எதிராக 38 பந்துகளில் 101 ரன்கள் குவித்தவர். 62 ஒரு நாள் போட்டிகளில் 8 அரை சதங்கள், 1 சதம் என மிக வேகமாக வளர்ந்து வரும் பேட்ஸ்மேன்.

ஜோ ரூட்

ஜோ ரூட்

வெறும் 46 ஒருநாள் போட்டிகளிலேயே, 8 அரை சதங்கள், 3 சதங்களுடன் இங்கிலாந்தின் முக்கிய பேட்ஸ்மேனாக மாறியுள்ளார் ஜோ ரூட். கடந்த ஆஸஸ் தொடரில் ரூட், சக ஆட்டக்காரர் பெல்லுடன் இணைந்து டெஸ்ட் போட்டியிலும் தனது முத்திரையை பதித்தார்.

கேப்டன் கூல்

கேப்டன் கூல்

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்றால் அது டோணிதான். டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்துவிட்டு முழுக்க ஒருநாள், டி20 போட்டிகளில் கவனத்தை திசை திருப்பியுள்ளார். மிடில்-ஆர்டரில் இவர் இறங்க உள்ளார் என்ற தைரியமே சக வீரர்களை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த செய்யும். 252 ஒருநாள் போட்டிகளில் 8,245 ரன்களை குவித்துள்ள டோணியின் பேட்டிங் சராசரி 52.51 ஆகும். இதில் 9 செஞ்சுரிகள், 56 அரை சதங்களும் உள்ளன. பார்மில் இருந்தால், உலகின் மிக ஆபத்தான பேட்ஸ்மேன் டோணியாகத்தான் இருப்பார்.

Story first published: Friday, February 6, 2015, 16:15 [IST]
Other articles published on Feb 6, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+