Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எமிரேட்ஸுக்கு பயன்படாமல் போன 'பாலக்காட்டு மாதவனின்' அசத்தல்.. வென்றது ஜிம்பாப்வே!

வெலிங்டன்: ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு எதிரான போட்டியில், ஜிம்பாப்வே கடைசி வரை போராடி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலக கோப்பையின் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஐக்கிய அரபு எமிரேட்டும், ஜிம்பாப்வேயும் இன்று மோதின. நியூசிலாந்தின் சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில், இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்கியது.

டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் எல்டன் சிக்கும்புரா தனது அணி முதலில் ஃபீல்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட் அணி பேட்டிங்கை தொடங்கியது.

கிருஷ்ண சந்திரன்

கிருஷ்ண சந்திரன்

தொடக்க ஆட்டக்காரர் அம்ஜத் அலி, 7 ரன்களில் டென்டாய் சடாரா பந்தில் கிரேக் எர்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ஆன்ட்ரி பெரென்கர் 22 ரன்கள் எடுத்திருந்தபோது சாலமன் மிரே பந்து வீச்சில் பிரென்டன் டைலரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

ஒன்-டவுன் பேட்ஸ்மேன் கிருஷ்ணா சந்திரன் 63 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தபோது சாலமோன் மிரே பந்து வீச்சில் எல்டன் சிக்கும்புராவிடம் கேட்ச் கொடுத்தார்.

பேட்டிங் சூப்பர்

பேட்டிங் சூப்பர்

இதைத் தொடர்ந்து குர்ரம்கான் 45 ரன்கள், விக்கெ் கீப்பர் ஸ்வப்னில் பாட்டீல் 32 ரன்கள், சைமான் அன்வர் 67 ரன்கள் எடுத்து அணியின் ரன்னை அதிகரிக்க உதவினர். ரோகன் முஸ்தபா 4 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். 8வதாக களமிறங்கிய அம்ஜத் ஜாவீத் 25, 9வதாக களமிறங்கிய முகமது நவீத் ஆகியோரும் சிறப்பாக பேட்டிங் செய்து, முறையே, 25 மற்றும் 23 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்டின் சிறப்பான பேட்டிங் காரணமாக அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் குவித்தது. டென்டாய் சடாரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பந்து வீச்சிலும் யூ.ஏ.இ அசத்தல்

பந்து வீச்சிலும் யூ.ஏ.இ அசத்தல்

இதன்பிறகு பேட்டிங்கை தொடங்கிய ஜிம்பாப்வேக்கு எதிராக பந்து வீச்சிலும் ஐக்கிய அரபு எமிரேட் கட்டுப்பாட்டை காண்பித்தது. ஜிம்பாம்பே தொடக்க வீரர் சிகந்தர் ரஜா 44 பந்துகளில் 46 ரன்களை அதிரடியாக குவித்தபோதும், எமிரேட் கேப்டன், முகமது தாகிர் பந்து வீச்சில் கிருஷ்ண சந்திரனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பிரெண்டன் டெய்லர் அதிரடி

பிரெண்டன் டெய்லர் அதிரடி

ஹேமில்டன் மசகட்சா 1 ரன்கள் எடுத்திருந்தபோது அம்ஜத் ஜாவீத் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் ரேஜிஸ் சகப்வா 35 ரன்கள் எடுத்திருந்தபோது, தாகிர் பந்து வீச்சில் ஹிட்விக்கெட் முறையில் அவுட் ஆனார். ஆனால் மிடில் ஆர்டரில் பிரெண்டன் டெய்லர் 47 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்க உதவினார். அவர் நாசிர் ஆஜிஸ் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். சாலமோன் மிரே 9 ரன்களில் முகமது நவீத் பந்து வீச்சில் ஸ்வப்னில் பாட்டிலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மீண்டும் கிருஷ்ண சந்திரன்

மீண்டும் கிருஷ்ண சந்திரன்

சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிரேக் எர்வின் 42 ரன்களை எடுத்திருந்தபோது, தனது பந்து வீச்சில் தானே கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார், கிருஷ்ண சந்திரன். ஒருமுனையில் சீரான இடைவெளியில் வீக்கெட்டுகள் வீழ்ந்தாலும், சீன் வில்லியம்ஸ் அபாரமாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே வெற்றிக்கு துணையாக இருந்தார். அவருக்கு கேப்டன் எல்டன் சிக்கும்புரா நல்ல துணையாட்டம் கொடுத்து 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 48வது ஓவரில் ஜிம்பாப்வே அணி 286 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

ஆல் ரவுண்டராக கிருஷ்ண சந்திரன்

ஆல் ரவுண்டராக கிருஷ்ண சந்திரன்

அனுபவம் குறைந்த ஐக்கிய அரபு எமிரேட் பந்து வீச்சாளர்களும், ஃபீல்டர்களும் பல்வேறு தவறுகளை களத்தில் செய்திருந்தாலும், பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்திய ஜிம்பாப்வே அணியை 48வது ஓவர் வரை சமாளித்து சாதித்தனர். கேரளாவில் பாலக்காடு அருகேயுள்ள கொல்லங்கோட்டில் பிறந்து, சென்னையில் படித்து ஐக்கிய அரபு எமிரேட்டுக்காக விளையாடும் கிருஷ்ண சந்திரன் 34 ரன்கள் விளாசியதுடன், தனது பவுலிங்கில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். ஈ பாலக்காட்டு மாதவன் ஒரு வல்லிய ஆட்டக்காரனல்லோ.. அதே!

Story first published: Thursday, February 19, 2015, 11:25 [IST]
Other articles published on Feb 19, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+