Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக்.கை வென்றதால் நல்ல புத்துணர்ச்சியுடன் இந்தியா... கவாஸ்கர்

டெல்லி: உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வென்றதால் இந்திய அணிக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ICC World Cup 2015: Win Against Pakistan Will Rejuvenate India, Says Sunil Gavaskar

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று அடிலைடு நகரில் நடைபெற்றது. உலகக்கோப்பை இறுதி ஆட்டத்திற்கு இணையாக ரசிகர்களால் கருதப்பட்ட இப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியாவின் இந்த வெற்றி தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கூறியதாவது :-

பாகிஸ்தானை வீழ்த்தியதால் இந்திய அணிக்கு உண்மையிலேயே புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தினால் இந்தியா அனைத்து வழியிலும் முன்னோக்கி சென்றுவிடும். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறையுமே சிறப்பாக இருந்தது. 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆனால் பவுலிங்கில் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தானை நிலைகுறைய வைத்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Story first published: Monday, February 16, 2015, 18:46 [IST]
Other articles published on Feb 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+