For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூன்றே ஓவர்கள்.. பாக். அணியின் கோட்டையை சரித்த 2 பேர்.. ஆட்டம் இந்தியாவின் கை மாறிய அந்த நிமிடம்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி போட்ட மூன்று ஓவர்கள் மொத்த போட்டியின் திசையை அப்படியே மாற்றி இருக்கிறது.

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி!

லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி போட்ட மூன்று ஓவர்கள் மொத்த போட்டியின் திசையை அப்படியே மாற்றி இருக்கிறது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. போட்டியில் தொடர்ந்து நிறைய திருப்பங்கள், அதிரடி மாற்றங்கள் இதுவரை நடந்துள்ளது.

இந்த போட்டியில் காயம் காரணமாக இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார் பாதியில் வெளியேறினார். இதனால் அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் பவுலிங் போட்டு வருகிறார்கள்.

எப்படி ஆடியது

எப்படி ஆடியது

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. கே எல் ராகுல் 78 பந்துகளில் பொறுமையாக 57 ரன்கள் அடித்தார். ரோஹித் சர்மா மொத்தம் 113 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார்.கோலி 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.

அதிரடி

அதிரடி

இந்த வலுவான ஸ்கோரை எதிர்த்து தற்போது பாகிஸ்தான் அணி ஆடி வருகிறது. முதலில் நிதானமாக பாகிஸ்தான் அணி ஆடியது. இந்த நிலையில் இமாம் உல் ஹக் விக்கெட்டை விஜய் சங்கர் எடுத்தார். அதன்பின் பாகிஸ்தான் வீரர்கள் பாபர் ஆஸம், பஹர் சாமான் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். இவர்களின் விக்கெட்டை எடுக்க இந்திய அணியினர் திணறினார்கள்.

எந்த ஓவர்

எந்த ஓவர்

இந்த நிலையில் 23.6 வது ஓவரில் குல்தீப் சுழலில் பாபர் ஆஸம் அவுட்டானார். அப்போது அவர் 48 ரன்கள் எடுத்து இருந்தார். பந்து குத்திய வேகத்தில் மிக நன்றாக ஸ்விங் ஆனது. பின் பேட்டில் இன்சைட் எட்ஜ் ஆவது போல சென்று ஸ்டம்பை சாய்த்தது. இந்த ஓவர்தான் மிக முக்கியமான திருப்பு முனையாக இருந்தது.

அடுத்த ஓவர்

அடுத்த ஓவர்

அதன்பின் 25.2 ஓவர் போட்ட குல்தீப் மீண்டும் பாகிஸ்தான் கோட்டையை சிரித்தார். அந்த ஓவரில் இன்னொரு முக்கியமான வீரரான பஹார் ஸமன் அவுட்டானார். சாஹலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதிரடியாக 62 ரன் எடுத்த அவரின் விக்கெட் பாகிஸ்தான் அணியை குழைத்தது.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

பின் 6வது ஓவரில் மிக முக்கியமான மாற்றம் நடந்தது. அந்த ஓவரின் 6.5வது பந்தில் பாண்டியா ஹபீஸ் விக்கெட்டை எடுத்தார். ஸ்கோயர் லெக் திசையில் பவுண்டரி அடிக்க முயன்ற ஹபீஸ் பின் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் வெறும் 9 ரன்கள் மட்டும் எடுத்து இருந்தார்.

மொத்தமாக மாறியது

மொத்தமாக மாறியது

அதன்பின் அதே ஓவரில் அடுத்த பந்தில் ஹர்திக் பாண்டியா, சோயப் மாலிக் விக்கெட்டை எடுத்தார். களமிறங்கிய உடன் ஹர்திக் பாண்டியா அவரை போல்ட் செய்தார். இந்த மூன்று ஓவர்கள்தான் பாகிஸ்தான் கையில் இருந்த போட்டியை அப்படியே எடுத்துக் கொண்டு வந்து இந்தியாவிடம் கொடுத்து இருக்கிறது.

Story first published: Monday, June 17, 2019, 13:20 [IST]
Other articles published on Jun 17, 2019
English summary
ICC World Cup 2019: 2 Indian players twisted the match against Pakistan in just 3 overs today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+