For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜஸ்ட் மிஸ்.. இந்தியா களமிறக்க நினைத்த இளம் ஆல் ரவுண்டர்.. 9 அணிகள் குறி வைக்கும் அந்த தமிழர்?

நேற்று நியூஸிலாந்திற்கு எதிராக நடக்க இருந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் முக்கியமான வீரர் ஒருவர் களமிறங்க இருந்ததாக செய்திகள் வெளியாகி வருகிறது.

லண்டன்: நேற்று நியூஸிலாந்திற்கு எதிராக நடக்க இருந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் முக்கியமான வீரர் ஒருவர் களமிறங்க இருந்ததாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்திய அணியில் தற்போது மிக முக்கியமான தொடக்க வீரரான ஷிகர் தவான் காயத்தில் இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்தான். இவருக்கான மாற்று வீரரை இந்திய அணி தேர்வு செய்துள்ளது.

ஆனால் இதற்கான அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்திய அணியில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது என்று பல்வேறு நாட்டை சேர்ந்த அணிகள் கவனமாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.

என்ன காயம்

என்ன காயம்

இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் கையில் காயம் பட்டது. இந்த காயம் இன்னும் சரியாக குணமாகவில்லை. தவான் பிடித்த 14வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். அப்போது தவானுக்கு கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது அவர் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யார் இறங்குகிறார்

யார் இறங்குகிறார்

இதனால் தற்போது அவரின் இடத்தில் கே எல் ராகுல் களமிறங்குகிறார். கே எல் ராகுல் தற்போது இந்திய அணியில் 4வது இடத்தில் ஆடி வருகிறார். அவரை அவரின் பழைய இடமான ஓப்பனிங்கில் ஆட வைக்க இந்திய அணி முடிவெடுத்து இருக்கிறது. தவான் வரும் வரை இவர்தான் முதல் இடத்தில் இறங்கி ஆடுவார்.

நான்காவது இடம்

நான்காவது இடம்

இந்த நிலையில் நான்காவது இடத்தில் கே எல் ராகுலுக்கு பதில் யார் இறங்குவார் என்ற கேள்வி நிலவி வந்தது. அதற்கு நேற்று ரகசியமான பதில் ஒன்று கிடைத்தது. அதன்படி கே எல் ராகுல் இடத்தில் விஜய் சங்கர்தான் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது . இதை நேற்று மாலை அளித்த பேட்டியில் கோலியும் மறைமுகமாக தெரிவித்துள்ளார். கே எல் ராகுல் இடத்தில் ஆல் ரவுண்டர் ஒருவர் இறங்குவார் என்று அவர் கூறியுள்ளார்.

அவர் மட்டுமே

அவர் மட்டுமே

தற்போது இந்திய அணியில் களமிறங்காமல் வெளியே இருக்கும் இரண்டு ஆல் ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் மட்டும்தான். இதில் ஜடேஜா நான்காவது இடத்தில் இறங்க மாட்டார் என்பதால் அது விஜய் சங்கர்தான் என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் இவர் மீது மற்ற 9 அணிகளும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது.

எப்படி அடிக்கிறார்

எப்படி அடிக்கிறார்

விஜய் சங்கர் அணியில் எப்படி பாதிப்பை ஏற்படுத்த போகிறார் என்று எல்லோரும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். ஆனால் நேற்று இந்தியா நியூசிலாந்து அணிகள் மோத வேண்டிய போட்டி தேவையில்லாமல் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இவர் இறங்குவது ஜஸ்ட் மிஸ்ஸானது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 14, 2019, 13:59 [IST]
Other articles published on Jun 14, 2019
English summary
ICC World Cup 2019: 9 World cup teams focussing on one Tamilnadu all-rounder in the Indian team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+