Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க உள்ளே வராதீங்க.. அனுமதி இல்லை.. நேற்று போட்டியில் மூத்த வீரருக்கு நேர்ந்த அவமானம்.. அட பாவமே!

லண்டன்: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் வீரர் ஒருவர் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்து உள்ளது.

முதலில் களமிறங்கிய இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. இந்தியா வெறும் 3 விக்கெட் இழப்பில் 43.3 ஓவர்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

நேற்று நடந்த இந்த போட்டியை காண இலங்கை அணியின் முன்னாள் வீரரும் லெஜெண்டுமான சனத் ஜெயசூரியா வந்து இருந்தார். அவர் ரசிகர்கள் அமர்ந்து இருக்கும் பொது இருப்பிடத்தில் அமர்ந்து போட்டியை பார்த்தார். ரசிகர்களுடன் ரசிகராக அமர்ந்து அவர் போட்டியை கண்டுகளித்தார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அவருக்கு ஐசிசி இரண்டு வருடங்கள் தடை விதித்து இருக்கிறது. அவரிடம் முறைகேடாக சொத்துக்கள் இருப்பதாக புகார் உள்ளது. இதனால் ஐசிசி அமைப்பின் ஊழல் தடுப்பு பிரிவு அவரை விசாரிக்க முடிவு செய்தது. ஆனால் ஜெயசூரியா அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள்

இதனால் இரண்டு ஆண்டுகள் ஜெயசூரியா கிரிக்கெட் வீரர்களை சந்திக்க கூடாது. அவர்களிடம் பேச கூடாது. ஐசிசி நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது. அணி நிர்வாகிகள் இருக்கும் அறைக்கு செல்ல கூடாது. ஆனால் ஜெயசூரியா சாதாரண ரசிகராக கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இருக்கும் பகுதியில் இருந்து கண்டுகளிக்கலாம்.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

இதனால்தான் நேற்று ஜெயசூரியா ரசிகர்களுடன் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்தனர். ஜெயசூரியாவை சுற்றி ஐசிசி சார்பாக பாதுகாவலர் ஒருவரும் நிற்க வைக்கப்பட்டு இருந்தார். ஐசிசி இதுகுறித்து கூறும் போது அவர் மீது தடை இருப்பதால் வீரர்களை அவர் சந்திப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

Story first published: Sunday, July 7, 2019, 11:44 [IST]
Other articles published on Jul 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+