Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி கண்ட முத்து.. இந்திய அணியில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கும் பவுலர்.. அதிரடி திருப்பம்!

லண்டன்: லண்டன் சென்று இருக்கும் உலகக் கோப்பை இந்திய அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் இடம்பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிகவும் வலுவான அணியாக இருக்கிறது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்திலும் இந்திய அணி திறமையாக முழு பலத்தையும் காட்டி வருகிறது.

முக்கியமாக இந்திய ஆல் ரவுண்டர்களும், பவுலர்களும் மிகவும் திறமையாக செயல்பட்டு வருகிறார்கள். இந்திய அணியின் பவுலர்கள் அனைத்து அணிகளுக்கும் அச்சுறுத்தலாக மாறி உள்ளனர்.

சிறப்பாக வீசுகிறார்கள்

சிறப்பாக வீசுகிறார்கள்

தொடர் முழுக்க இந்திய அணியின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். பும்ரா பந்து வீச்சில் முன்னிலையில் இருக்கிறார். புவனேஷ்வர்குமார், சாஹல் இருவரும் பந்து வீச்சில் தெறிக்கவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் பாண்டியாவும் தேவைப்படும் நேரங்களில் மிக சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

முக்கியம் என்ன

முக்கியம் என்ன

இன்னும் இந்திய அணியில் வேறு ஒரு வேகப்பந்து வீச்சாளர் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டு இருக்கிறார். இந்திய அணியின் மூத்த பவுலரான முகமது சமி 15 பேர் விளையாடும் அணியில் இடம்பெற்று வாய்ப்பிற்காக காத்துக் கொண்டு இருக்கிறார். இவர் விரைவில் அணியில் எடுக்கப்படுவார் என்றும் கூறுகிறார்கள்.

எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

அதன்படி முகமது ஷமி சிறிய போட்டிகளில் இந்திய அணியில் விளையாடுவார் என்று கருதப்படுகிறது. அதாவது பெரும்பாலும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் முகமது சமி அணியில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷமி அணியில் எடுக்கப்படலாம்.

இன்னொரு வீரர்

இன்னொரு வீரர்

அதேபோல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் அணியில் எடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். பும்ராவை முதன்மையான பவுலராக வைத்துக் கொண்டு, தீபக் சாஹருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்க போகிறார்கள் என்று கூறப்படுகிறது.

சென்னை வீரர்

சென்னை வீரர்

தீபக் சாஹர் சென்னை சூப்பர் கிங்ஸ் மூலம் வைரலான வீரர். சென்னை அணிக்கு இவர்தான் ஓப்பனிங் ஸ்பீட் பவுலர். இவரை கிரிக்கெட் உலகிற்கு அடையாளம் காட்டியதே தோனிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

வாய்ப்பு உள்ளது

வாய்ப்பு உள்ளது

இவர் தற்போது லண்டனில்தான் இருக்கிறார். இந்திய வீரர்களுக்கு இவர் வலை பயிற்சியின் போது பந்து வீசி வருகிறார். இவரின் சிறப்பான பந்து வீச்சை பார்த்து, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இவரை அணியில் எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். சிறிய போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Thursday, June 13, 2019, 13:48 [IST]
Other articles published on Jun 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+