Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்குத்தான் உண்மை தெரியும்.. மனசாட்சி உறுத்தி இருக்க வேண்டும்.. நேற்று நடந்த ஷாக்கிங் சம்பவம்!

லண்டன்: நேற்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த ஷாக்கிங் சம்பவம் ஒன்று கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்திய அணி செமி பைனலுக்கு செல்ல வேண்டும் என்று தீவிரமாக இந்த போட்டியில் ஆடியது.

இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் வெளியே சென்றுவிடுவோம் என்பதால் இங்கிலாந்து அணியும் உயிரை கொடுத்து விளையாடியது. போட்டியின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை இதனால் விறுவிறுப்பாக சென்றது.

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

ஆனால் இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். நேற்று போட்டியில் இங்கிலாந்து சார்பாக களமிறங்கிய தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் பிரைஸ்டோ இருவரும் மாறி மாறி அதிரடியாக ஆடி வந்தனர். இவர்களின் இணையை பிரிக்க இந்திய பவுலர்கள் மோசமாக திணறினார்கள்.

நடந்தது என்ன

நடந்தது என்ன

நேற்று நடந்த இந்த போட்டியில் முக்கியமான சம்பவம் நடைபெற்றது. நேற்று பாண்டியா வீசிய 11வது ஓவரில் இந்திய அணிக்கு இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை வீழ்த்த நல்ல வாய்ப்பு கிடைத்தது. அந்த ஓவரின் 5வது பந்து ராயின் கையில் பட்டு தோனி அதை கேட்ச் பிடித்தார். பந்து சரியாக கிளவுஸில் பட்டது. இதை பார்த்ததும் கோலி விக்கெட் என்று கத்தினார்.

எப்படி பட்டது

எப்படி பட்டது

பந்து கிளவுஸில் பட்டது எல்லோருக்கும் நன்றாக காதில் கேட்டது. ஆனால் நடுவர் இதற்கு விக்கெட் கொடுக்கவில்லை. இதை பார்த்து கோலி அதிர்ச்சி அடைந்தார். இதனால் கோலி ரிவ்யூ கேட்க ஆசைப்பட்டார். பாண்டியாவும் ரிவ்யூ கேட்க ஆசைப்பட்டார். ஆனால் தோனி ரிவ்யூ கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டார்.

காதில் கேட்கவில்லை

காதில் கேட்கவில்லை

தனக்கு சத்தம் கேட்கவில்லை என்று தோனி கூறிவிட்டார். இதனால் கோலியும் தோனியின் பேச்சை கேட்டு, ரிவ்யூ கேட்காமல் விட்டுவிட்டார். ஆனால் ரிப்ளேயின் போது அது விக்கெட்தான் என்பது தெரிந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நியாயம்

நியாயம்

நியாயப்படி பார்த்தால் இங்கிலாந்து வீரர் ஜேசனுக்கு மட்டுமே தான் விக்கெட்டா இல்லையா என்பது தெரியும். கிளவுஸில் பந்து பட்டது கண்டிப்பாக உணரக்கூடிய அளவிற்குத்தான் இருக்கும். இதனால் ஜேசனுக்கு அந்த விக்கெட் கண்டிப்பாக தெரிந்து இருக்கும். ஆனால் அவர் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை என்றதும் தொடர்ந்து விளையாட தொடங்கி விட்டார். இதை பலரும் கண்டித்து இருக்கிறார்கள்.

கோலி எப்படி

கோலி எப்படி

கோலி இப்படித்தான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விக்கெட் விழாமலே தானாக விக்கெட் என்று நினைத்து வெளியே சென்றார். சச்சின் பலமுறை அவுட் கொடுக்காமலே நேர்மையாக பெவிலியன் சென்று இருக்கிறார். ஆனால் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் மட்டும் ஏன் இப்படி விளையாடினார். அவருக்கு உண்மை தெரியும், ஏன் அவருக்கு மனசாட்சி உறுத்தவில்லையா, ஆட்டத்தில் நேர்மை வேண்டாமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Story first published: Monday, July 1, 2019, 12:45 [IST]
Other articles published on Jul 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+