Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாவம்.. அவரின் கடைசி போட்டி முடிந்துவிட்டது.. நல்ல வாய்ப்பை நழுவவிட்ட முன்னணி இந்திய வீரர்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS BAN | நல்ல வாய்ப்பை நழுவவிட்ட முன்னணி இந்திய வீரர்!

லண்டன்: இந்திய அணியின் முக்கியமான வீரர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட முதல் மற்றும் கடைசி வாய்ப்பை நழுவவிட்டு இருக்கிறார்.

கடந்த செவ்வாய் கிழமை இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடந்தது. இதில் இந்தியா அதிரடியாக வெற்றிபெற்றது. கடைசி வரை திரில்லாக நடந்த இந்த போட்டியில் பும்ரா பவுலிங்கில் இந்தியா வென்றது.

இந்த போட்டியில் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணி ஒரே ஒரு ஸ்பின் பவுலருடன் களமிறங்கி இதில் விளையாடியது.

நீண்ட வருடம்

நீண்ட வருடம்

அதன்பின் 15 வருடம் கழித்து கடந்த செவ்வாய் கிழமைதான் அவருக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது பலருக்கும் சந்தோசம் அளித்தது. உலகம் முழுக்க பலர் தினேஷ் கார்த்திக்கை வாழ்த்தி டிவிட் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் இவர் இந்த அழகான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த போட்டியில் 9 பந்துகள் பிடித்த தினேஷ் கார்த்திக் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் வெறும் 8 ரன்கள் மட்டுமே இவர் எடுத்தார். முக்கியமான நேரத்தில் களமிறங்கிய இவர் பெரிய அளவில் அணிக்கு ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் இவர் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்கிறார்கள்.

ஏன் சந்தேகம்

ஏன் சந்தேகம்

அடுத்த போட்டியில் இந்திய அணி இத்தனை பேட்ஸ்மேன்களோடு களமிறங்காது. கண்டிப்பாக கூடுதலாக ஒரு ஸ்பின் பவுலர் அணியில் இருப்பார். இதனால் தினேஷ் கார்த்தி அடுத்த போட்டியில் விளையாட மாட்டார். அதேபோல் செமி பைனலிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது. இதனால் பெரும்பாலும் தினேஷ் கார்த்திக் விளையாடிய கடைசி மற்றும் முதல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

Story first published: Thursday, July 4, 2019, 14:46 [IST]
Other articles published on Jul 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+