சந்தோசம்.. நல்லவேளை இந்திய அணி தப்பிச்சது.. ரசிகர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!
லண்டன்: உலகக் கோப்பை செமி பைனலுக்கு இந்திய அணி சென்று இருக்கும் நிலையில் ஒரு நல்ல செய்தி ரசிகர்களுக்கு சொல்லப்பட்டு உள்ளது.
உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த தொடரில் சாம்பியன் யார் என்று தெரிந்துவிடும்.
உலகின் நான்கு வலுவான அணிகள் செமி பைனலுக்கு சென்று உள்ளது. இதனால் இந்த உலகக் கோப்பை தொடர் இன்னும் அதிகம் விறுவிறுப்பு கூடி உள்ளது.

செமி பைனல்
மொத்தம் இரண்டு செமி பைனல் போட்டிகள் நடக்கும். ரவுண்ட் ராபின் முறையின்படி புள்ளிகள் பட்டியலில் முதலில் இருக்கும் அணி நான்காவது இருக்கும் அணியை செமி பைனலில் எதிர்கொள்ளும். இரண்டாவது இருக்கும் அணி மூன்றாவது இருக்கும் அணியை செமி பைனலில் சந்திக்கும். அதன்பின் வரும் ஞாயிற்றுக் கிழமை பைனல் போட்டி நடக்கும்.

வைரல்
இந்த நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதனால் கடைசி இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியை இந்தியா செமி பைனலில் எதிர்கொள்ளும். இந்த போட்டி வரும் செவ்வாய் கிழமை மான்செஸ்டர் மைதானத்தில் நடக்க உள்ளது.

இன்னொரு போட்டி
இன்னொரு செமி பைனலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கிறது. இந்த போட்டி வரும் வியாழக்கிழமை நடக்க உள்ளது. முதலில் இந்தியா புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியா அணிதான் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அதனால் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில்தான் போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இங்கிலாந்து போட்டி
இந்திய அணி இங்கிலாந்தை செமி பைனலில் சந்தித்து இருந்தால் இந்தியா அவே ஜெர்சியை அணிந்து இருக்க வேண்டும். ராசி இல்லாத ஜெர்சி என்று கருதப்பட்ட காவி நிற ஜெர்சியை இந்தியா அணிந்து இருக்க வேண்டும் . ஆனால் தற்போது செமி பைனலில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்வதால் காவி ஜெர்சியை அணியை வேண்டிய அவசியம் இல்லாமல் போய் இருக்கிறது.

ரசிகர்கள் சந்தோசம்
இதுதான் ரசிகர்களை சந்தோசத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. நல்ல வேளை செமி பைனலில் அந்த ஜெர்சியை இந்தியா அணியவில்லை. சந்தோசம். இந்தியா கண்டிப்பாக பைனலுக்கு செல்வது உறுதியாகிவிட்டது என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications