Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறப்பாக பவுலிங் செய்தும் கூட சிக்கல்.. இந்தியாவின் கனவை தகர்க்க போகும் பிரச்சனை.. என்ன நடக்குமோ?

லண்டன்: இந்திய பவுலர்கள் மிக சிறப்பாக பந்து வீசியும் கூட மிகப்பெரிய பிரச்சனை ஒன்று இந்திய அணிக்கு செமி பைனல் போட்டியின் இரண்டாம் பாகத்தில் காத்து இருக்கிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை செமி பைனல் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்யும் அணி இங்கு அதிக ரன்களை எடுக்க முடியும். இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அவ்வளவு எளிதாக பெரிய இலக்கை எட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

செம பவுலிங்

செம பவுலிங்

இந்த போட்டி முழுக்க இந்திய அணியின் பவுலிங் மிகவும் நன்றாக இருந்தது. ஜடேஜா, பும்ரா, புவனேஷ்வர்குமார், பாண்டியா என்று எல்லோரும் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்திய அணியின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக திணறினார்கள். அந்த அணியின் ரன் ரேட்டை இந்திய பவுலர்கள் தொடர்ந்து கட்டுப்படுத்தினார்கள்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

பும்ரா - புவி கொஞ்சம் கூட நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ரன்கள் அடிக்க வாய்ப்பு கொடுக்கவே இல்லை. இந்த 10 ஓவர்களில் ஒரே ஒரு பவுண்டரிதான் போனது. முதல் பவர் பிளேயில் போடப்பட்ட 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 27 ரன்கள்தான் கொடுத்தது. அதில் 1 விக்கெட் எடுத்தது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

மழை பாதிக்கும் முன் போடப்பட்ட கடைசி ஐந்து ஓவர்களில் இதேதான் நடந்தது. அந்த ஐந்து ஓவர்களில் பும்ரா, புவி ஜோடி சிறப்பாக பந்து வீசினார்கள். அந்த ஐந்து ஓவர்களை இந்தியா வீசும் போதே லேசாக மழை பெய்தது. இது இந்திய அணிக்கு சிக்கலாக மாற வாய்ப்புள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்திய அணி எவ்வளவு சிறப்பாக பந்து வீசினாலும் கடைசியில் இந்திய அணிக்கு இந்த மழையால் முக்கிய சிக்கல் காத்து இருக்கிறது. பொதுவாக மான்செஸ்டர் பிட்ச் இரண்டாவது பாதியில் பவுலிங் பிட்சாக மாறுவது வழக்கம். அதேபோல் இன்றும் பிட்ச் போக போக ஸ்லோ ஆகும். இதனால் 220+ ரன்களை எடுப்பது மிகவும் கடினம் ஆகும்.

வேறு என்ன

வேறு என்ன

அது மட்டுமில்லாமல் மழை காரணமாக பிட்ச் போக போக மிகவும் ஸ்லோ ஆகும். இதனால் இந்திய அணியால் பெரிய ஷாட்களை ஆட முடியாது. இது இந்திய அணிக்கு சேசிங்கின் போது பெரிய பிரச்சனை ஆகும். இதை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள். கனவுகளை சுமந்து விளையாடும் வீரர்கள் எப்படி இதை செய்து முடிக்க போகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Tuesday, July 9, 2019, 18:44 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+