Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பங்கள்.. செமி பைனலுக்கு முன்பா இப்படி நடக்கணும்.. கவலையில் முக்கிய அணி!

Recommended Video

WORLD CUP 2019 | அரையிறுதிக்கு முன்பா இப்படி நடக்கணும்? கவலையில் ஆஸ்திரேலியா- வீடியோ

லண்டன்: உலகக் கோப்பை தொடரில் செமி பைனல் போட்டிகள் நடக்க உள்ள நிலையில் முக்கியமான அணியில் உள்ள வீரர்கள் சிலர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள்.

உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த வாரம் இரண்டு செமி பைனல் போட்டிகள் நடக்க உள்ளது. அதன்பின் வார இறுதியில் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் தற்போது செமி பைனலுக்கு தேர்வாகி இருக்கிறது. இதனால் செமி பைனல் போட்டிகள் பெரும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

உலகக் கோப்பை போட்டியின் தொடக்கத்தில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் நிறைய சிக்கல்களை சந்தித்தது. அதில் முதலாவது சிக்கல் காயம். இந்திய அணியை சேர்ந்த மூன்று வீரர்கள் இந்த தொடரில் காயம் காரணமாக அவதிப்பட்டார்கள். அதேபோல் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வீரர்களும் காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியில் விலகினார்கள்.

இப்போது என்ன

இப்போது என்ன

ஆனால் இவர்கள் எல்லாம் விலகிய பின் இந்தியா, தென்னாப்பிரிக்கா இரண்டு அணிகளும் மாற்று வீரர்களை தேர்வு செய்தது, அணியை சரியாக தயார் செய்து தொடரின் பாதியிலேயே நல்ல அணியாக உருவெடுத்தது. ஆனால் ஆஸ்திரேலியா அப்படி அல்ல. ஆஸ்திரேலியா அணிக்கு இப்போதுதான் இந்த பிரச்சனையே தொடங்கி உள்ளது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் உஸ்மான் குவாஜா இரண்டு வீரர்களும் தற்போது காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். இரண்டு பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் முக்கியமான வீரர்கள் என்று பார்க்கப்படும் இரண்டு பேரும் காயம் அடைந்தது, அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு மார்கஸ் ஸ்டோனிஸ் நல்ல ஆல் ரவுண்டராக பலம் சேர்த்து வந்தார். மேலும் உஸ்மான் குவாஜா ஒன் டவுன் இறங்கி ஆஸ்திரேலியா அணிக்கு வலு சேர்த்து வந்தார். தற்போது இவர்கள் இருவரும் செமி பைனல் நடக்கும் நேரத்தில் விலகியது பெரிய சிக்கலை அந்த அணிக்கு ஏற்படுத்தி உள்ளது. இவர்களுக்கு பதிலாக மேத்யூ வேட், மிட்சல் மார்ஷ் ஆகியோர் அணிக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள்.

Story first published: Monday, July 8, 2019, 9:57 [IST]
Other articles published on Jul 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+