Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் தவறு செய்தீர்கள்.. அந்த ஒரு முடிவு போட்டியையே மாற்றி இருக்குமே.. 48.3 பந்தில் நடந்தது என்ன?

Recommended Video

Dhoni run out | இந்திய அணியை அதிர வைத்த அந்த நொடி!

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது நடந்த சம்பவம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது.

லண்டன்: நியூசிலாந்துக்கு அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது நடந்த சம்பவம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் செமி பைனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தோல்வி காரணமாக இந்தியா உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.

கடைசி வரை போராடிய இந்திய அணி மிக மெல்லிய இடைவெளியில் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து மிகவும் சிறப்பாக ஆடி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

நேற்று களத்தில் ஜடேஜா தோனி ஆடிய வரை போட்டி இந்தியாவின் வசம் இருந்தது. ஆனால் தோனி ரன் அவுட் ஆன பின் இந்தியாவின் தோல்வி உறுதியானது. தோனி தேவையில்லாமல் 48வது ஓவரில் ரன் அவுட் ஆனார். இந்திய அணிக்கு இரண்டு ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் தோனி அவுட்டானார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தோனி அவுட்டான அந்த பந்து நோ பால் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி பவர் பிளேயில் வெளி வட்டத்தில் மைதானத்தில் 5 பேர் மட்டுமே நிற்க வேண்டும். அதற்கு மேல் வீரர்கள் நின்றால் அது நோ பால் என்று கருதப்படும். தோனி அவுட்டான 48.3 பந்தில் நியூசிலாந்து அணியின் 6 வீரர்கள் வெளிவட்டத்தில் இருந்தனர்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

இதனால் அந்த பால் நோ பால் ஆகும். தோனியின் அவுட் சர்ச்சையாகி உள்ளது. ஆனாலும் நோ பாலில் ரன் அவுட் முறையில் அவுட்டானாலும் அது அவுட்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தோனிக்கு அவுட் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒருவேளை எப்படி

ஒருவேளை எப்படி

ஆனால் ஒருவேளை இந்த 6 வீரர்கள் பீல்டிங் நின்றதை நடுவர் கவனித்து இருந்தால் நிறைய மாற்றங்கள் போட்டியில் நடந்து இருக்கும்.

5 வீரர்களை மட்டும் நிற்க வைக்கும்படி நடுவர் கேட்டு இருக்கலாம். இதனால் அந்த பந்தை எளிதாக தோனி வெளி வட்டத்தை நோக்கி அடித்து இருக்கலாம் (அந்த ஓவரில் முதல் பாலில் தோனி சிக்ஸ் அடித்தார்). வெளியில் பீல்டர்கள் இல்லாத காரணத்தால் ஹிட் அடிக்க வசதியாக இருந்திருக்கும்.

தோனி ரன் அவுட் ஆகி இருக்க வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும்.

அந்த பாலில் ஒரு ரன் வந்தது மட்டுமில்லாமல், அடுத்த பந்தில் ஃபிரி ஹிட் வந்திருக்கும்.

அந்த ஒரு தவறு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் போட்டியே மாறி இருக்கும்.

Story first published: Thursday, July 11, 2019, 11:22 [IST]
Other articles published on Jul 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+