எல்லோரும் எதிர்பார்த்த அந்த மாற்றம் கடைசியில் நடக்கிறது.. கேப்டன் கோலி எடுத்த முக்கியமான முடிவு!
Recommended Video
லண்டன்: இன்று இலங்கைக்கு எதிராக நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணியில் மிக முக்கியமான வீரர் ஒருவர் சேர்க்கப்பட இருப்பதாக செய்திகள் வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. செமி பைனல் போட்டிகள் இந்த வாரம் தொடங்க உள்ளது. இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளது.
இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.

என்ன அணி
கடைசியாக வங்கதேசம் அணிக்கு எதிராக ஆடிய இந்திய அணி மிகவும் வித்தியாசமான அணியாகும். இதில் ஒரே ஒரு ஸ்பின் பவுலர் சாஹல் மட்டுமே இடம் பெற்று இருந்தார். அதேபோல் ஆல் ரவுண்டர் பாண்டியா மட்டுமே இடம்பெற்று இருந்தார். ஆனால் பேட்ஸ்மேன்கள் 6 பேர் இடம்பெற்று இருந்தனர். இதனால் பேட்டிங் ஆர்டர் இந்திய அணியில் வலுவாக இருந்தது.

ஆனால் இல்லை
இந்திய அணியில் பேட்டிங் ஆர்டர் வலுவாக இருந்தாலும் பவுலிங் அத்தனை வலுவாக இல்லை. காரணம் 4 ஸ்பீட் பவுலர்கள், ஒரு ஸ்பின் பவுலர் மட்டுமே அணியில் இருந்தனர். இதனால் இந்திய அணி ஸ்பின் மூலம் விக்கெட் எடுக்க முடியாமல் கடுமையாக திணறியது. இதனால் இன்று நடக்கும் போட்டியில் முக்கியமான வீரர் ஒருவரை அணிக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

யார் அவர்
அதன்படி இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் ஜடேஜா போட்டியிட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. ஜடேஜா இடது கை ஸ்பின் பவுலர். இவர் இன்று அணிக்குள் புதிய ஸ்பின் ஆப்ஷனாக சேர்க்கப்படுவார் என்று கூறுகிறார்கள். அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு இவர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ஏன் அப்படி
அதன்படி சாஹலுக்கு ஸ்பின் பவுலிங்கில் ஜடேஜா நல்ல உறுதுணையாக இருப்பார். அதேபோல் கடைசி நேரத்தில் இவர் பேட்டிங்கும் நன்றாக செய்வார். இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர், பவுலிங் ஆர்டர் இரண்டும் கண்டிப்பாக வலிமை பெறும் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications