Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களத்திற்கு வெளியே காத்திருந்த அதிசயம்.. ஆஸி. இந்தியா மோதிய போட்டியில் நிகழ்ந்த சுவாரசியம்.. வீடியோ!

லண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் களத்திற்கு வெளியே நடந்த சம்பவம் ஒன்று இந்திய அணியின் ரசிகர்களையும், வீரர்களையும் பெரிய ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா மோதும் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது. இரண்டு அணிகளும் இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் வலுவான அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த போட்டி அதிக கவனம் பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே போட்டியை இந்திய அணி தனது கட்டுப்பாட்டில்தான் வைத்து இருந்தது.

டாஸ் களம்

டாஸ் களம்

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற அணி பேட்டிங் தேர்வு செய்து ஆடியது. கும்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் பவுலிங் கணிக்க மிகவும் கடினமாக இருந்ததால் தொடக்கத்தில் இந்திய அணி நிதானமாக ஆடியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட்டிற்கு 352 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 57, தவான் 117, கோலி 82, பாண்டியா 48, தோனி 27, கே எல் ராகுல் 11 ரன்கள் எடுத்தனர்.

அவுட்டானது

அவுட்டானது

அதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர் முடியும் போது அனைத்து விக்கெட்டையும் இழந்து 318 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 69, வார்னர் 56, கேரி 55 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியையும் தாண்டிய நிறைய சர்ப்ரைஸ் நிகழ்வுகள் காத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

அதன்படி போட்டி நடந்த போது மைதானம் முழுக்க இந்திய ரசிகர்களே அதிகம் நிறைந்து இருந்தார்கள். இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள்தான் இந்த போட்டியை காண அதிகம் வந்திருந்தனர். மக்கள் இருக்கும் இடம் முழுக்க நீல நிறத்தில் மட்டுமே இருந்தது. ஆஸ்திரேலிய ரசிகர்கள் மிக மிக சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேறு என்ன

வேறு என்ன

அதுமட்டுமில்லாமல் அந்த ஓவல் மைதானத்திற்கு வெளியே நடந்த சம்பவம் ஒன்றும் பெரிய வைரலாகி உள்ளது. இந்த மைதானத்திற்கு வெளியே இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கடலை பொரி விற்பனை செய்தார். அப்படியே இந்திய முறைப்படி அதை ஸ்டைலாக அவர் உருவாக்கி விற்பனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேப்பரில் வாங்கி

பேப்பரில் வாங்கி

அதை இந்தியர்கள் போலவே பேப்பரில் மடித்து, உப்பு, பெப்பர் போட்டு விற்பனை செய்தார். அவர் இப்படி செய்தது பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது. இந்தியர்கள் போலவே அதை கூவி கூவி விற்றார். அவரிடம் பலர் கடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி இருக்கிறது.

சூப்பர்

மைதானத்தில் இந்திய ரசிகர்கள் அதிகம் இருந்ததே பலருக்கு ஆச்சர்யம் அளித்தது. அது போக தற்போது வெளியேயும் இந்தியர்களை கவர இப்படி கடலை விற்பது எல்லாம் பெரிதும் ஹிட் அடித்துள்ளது.

Story first published: Tuesday, June 11, 2019, 13:15 [IST]
Other articles published on Jun 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+