Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன அப்படியே நடக்கிறது! உலகக் கோப்பையில் தொடர்ந்து நிகழும் அதிசய சம்பவம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் யாரும் எதிர்பார்க்காத அதிசயமான சம்பவம் ஒன்று தொடர்ந்து நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களே இதை பார்த்து ஆச்சர்யம் அடைந்து போய் இருக்கிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பல டிவிஸ்ட் மற்றும் டர்ன்களுடன் நடந்து வருகிறது. எப்போது எந்த அணிக்கு என்ன நடக்கும், எந்த வீரருக்கு காயம் ஏற்படும், எந்த அணி வெளியே செல்லும் என்று தெரியாமல் பல திருப்பங்களுடன் தொடர் நடந்து வருகிறது.

இந்த தொடரில் அதிசயமான சம்பவம் ஒன்று தொடர்ந்து நடந்து வருகிறது. தொடரின் தொடக்கத்தில் இருந்தே இந்த சம்பவம் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

என்ன

என்ன

இந்த தொடரில் தொடக்கத்தில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியோடு தொடங்கியது. அடுத்த போட்டி வெற்றிபெற்றது. ஆனால் அதற்கு அடுத்த போட்டி மழை காரணமாக ரத்தானது. அதன்பின் நடந்த போட்டிகளில் வரிசையாக இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. அதன்பின் வரிசையாக இரண்டு போட்டிகளில் வென்றது. இது நேற்று நடந்த போட்டியையும் சேர்த்து.

1992ல் எப்படி

1992ல் எப்படி

இதேபோல்தான் 1992லும் நடைபெற்றது. 1992ல் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை வென்றது. அப்போது தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியோடு தொடங்கியது. அடுத்த போட்டி வெற்றிபெற்றது. அதற்கு அடுத்த போட்டி மழை காரணமாக ரத்தானது. அதன்பின் நடந்த போட்டிகளில் வரிசையாக இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. அதன்பின் வரிசையாக இரண்டு போட்டிகளில் வென்றது.

இப்போதும் அதே

இப்போதும் அதே

இப்போதும் அதேபோல் கொஞ்சம் கூட அச்சு பிசகாமல் அப்படியே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி தோல்வி எல்லாம் அப்படியே நடக்கிறது. இதனால் இந்த உலகக் கோப்பை போட்டியிலும் பாகிஸ்தான் வெல்ல போகிறது என்று பலர் கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள். இம்ரான் அணி போலவே இப்போதும் பாகிஸ்தான் வெல்ல போகிறது என்கிறார்கள். பாகிஸ்தான் அணியும் அதற்கு ஏற்றபடி பார்மிற்கு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

செமி பைனல்

செமி பைனல்

அதேபோல் 1992ம் ஆண்டு ஹாலிவுட் அலாவுதீன் படம் வெளியானது. இந்த வருடமும் புதிய அலாவுதீன் ஹாலிவுட் படம் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் அணி தொடர்ந்து அடுத்த 2 போட்டிகளில் வென்றால் செமி பைனலுக்கு சென்றுவிடலாம். இன்னும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 27, 2019, 10:14 [IST]
Other articles published on Jun 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+