Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசியாக ஒருமுறை களமிறங்க போகிறேன்.. சிஎஸ்கே வீரர் ஷாக் டிவிட்.. அடுத்த வீரரும் ஓய்வு பெறுகிறார்!

லண்டன்: இந்த உலகக் கோப்பை தொடரில் வரிசையாக நிறைய முக்கியமான வீரர்கள் ஓய்வு பெறுவது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிஎஸ்கே அணிக்காக விளையாடும் முக்கியமான வீரர் ஒருவரும் ஓய்வை அறிவித்து உள்ளார்.

உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த தொடரில் சாம்பியன் யார் என்று தெரிந்துவிடும்.

இந்த வாரம் செமி பைனல் போட்டிகள் நடக்க உள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் செமி பைனலுக்கு தேர்வாகி உள்ளது.

என்ன தொடர்

என்ன தொடர்

இந்த தொடர் முழுக்க பல முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்கள். ஆண்ட்ரு ரசல், தவான், விஜய் சங்கர், ஸ்டெய்ன், ரபாடா உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக பாதிக்கப்பட்டார்கள். அதே சமயம் மூத்த வீரர்கள் வரிசையாக தங்கள் ஓய்வை அறிவித்தனர்.

யார் எல்லாம்

யார் எல்லாம்

அதன்படி நேற்று பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயப் மாலிக் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன் மூலம் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளது. நேற்று வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு உருக்கமான விடை கொடுக்கப்பட்டது.

இரண்டு பேர்

இரண்டு பேர்

அதேபோல் மேற்கு இந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் இது. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரோடு அவர் ஓய்வு பெறுகிறார். அதேபோல் இந்திய அணியின் வீரரான அம்பதி ராயுடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்கா வீரர் இம்ரான் தாஹிர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

எப்போது

இதுகுறித்து அவர் செய்துள்ள டிவிட்டில், தென்னாப்பிரிக்கா அணிக்காக கடைசியாக நான் ஒருநாள் போட்டிகளில் விளையாட களமிறங்க போகிறேன் என்பதை நினைக்கவே உணர்ச்சிகரமாக இருக்கிறது. என்னுடன் எனக்காக இருந்த எல்லோருக்கும் இந்த நாளில் நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய கனவை நினைவாக்கிய தென்னாப்பிரிக்கா அணி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னிடம் இருப்பதை எல்லாம் நான் இன்று கொடுப்பேன், என்று அவர் டிவிட் செய்துள்ளார்.

இன்று ஓய்வு

இன்று ஓய்வு

இன்று ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை போட்டி லீக் ஆட்டம் நடக்கிறது. இன்று நடக்கும் போட்டியோடு தாஹிர் ஓய்வு பெறுகிறார். ஆனால் அவர் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

Story first published: Saturday, July 6, 2019, 10:51 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+