நீங்கள் அதிகம் டிரெய்னிங் எடுக்க வேண்டும்.. கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்?
Recommended Video
லண்டன்: இந்திய அணியை சேர்ந்த முக்கியமான வீரர் ஒருவர் நாளை நடக்கும் போட்டிக்காக இன்று கூடுதல் நேரம் பேட்டிங் பயிற்சி செய்தார்.
இந்தியா மேற்கு இந்திய தீவுகள் நாளை மோத இருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையில் நாளை நடக்கும் லீக் போட்டி இந்த தொடரில் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்தியா இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இதுவரை தோல்வி அடையவில்லை. இதனால் நாளை நடக்கும் போட்டியிலும் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்ய முடிவெடுத்து உள்ளது.

தீவிர பயிற்சி
இதனால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்கள். மழை காரணமாக இந்திய வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்ய முடியவில்லை. இதனால் அவர்கள் தற்போது உள் அரங்கில் பயிற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். உள் அரங்கில் நேற்றில் இருந்தே பயிற்சி நடந்து வருகிறது.

யார் வருவார்
இந்திய அணியில் தவான் காயம் காரணமாக விலகிவிட்டார் . அவருக்கு பதில் தற்போது விஜய் சங்கர் அணியில் இணைந்து ஆடி வருகிறார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்கு அதிரடியாக ஆடுவது கிடையாது. முக்கியமான நேரங்களில் இவர் பதற்றம் காரணமாக சொதப்பி வருவது இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

பயிற்சி
இதனால் தற்போது இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் தீவிரமாக பயிற்சியில் இறங்கி உள்ளார். நாளை இவர் இந்திய அணிக்காக களமிறங்குவது 90 சதவிகிதம் உறுதியாகிவிட்டது. இதனால் இவர் நேற்றும் இன்றும் அதிகமாக பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு இன்று காலையில் இருந்து பெங்களூர் ஐபிஎல் அணி வீரர் சைனி பந்து வீசி வருகிறார்.

ஏன் இப்படி
பொதுவாக மறுநாள் போட்டியில் விளையாடும் வீரர்கள்தான் இப்படி தீவிரமாக பயிற்சி செய்வார்கள். பவுன்சர் பந்துகளை நன்றாக ஆடுவதில் தினேஷ் கார்த்திக் வல்லவர். இதனால் நாளை பவுன்சர் போட்டு தாக்கும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இவர் நன்றாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தினேஷ் கார்த்திக் களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது.

போட்டனர்
அதே சமயம் விஜய் சங்கர் இந்திய வீரர்களுக்கு பவுலிங் மட்டுமே போட்டார். விஜய் சங்கர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. சைனியும், சங்கரும் மாறி மாறி தினேஷ் கார்த்திக்கு பவுலிங் போட்டனர். தினேஷ் கார்த்திக் 5வது பேட்ஸ்மேனாக நாளை களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications