For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எத்தனை வருத்தத்தோடு அவர் இதை செய்திருப்பார்.. இந்திய வீரருக்கு ஏற்பட்ட மோசமான நிலை.. வைரல்!

இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரின் இன்ஸ்டாகிராம் கமெண்ட் இணையம் முழுக்க பெரிய வைரலாகி இருக்கிறது.

Recommended Video

WORLD CUP 2019 | VIJAY SHANKAR WISHES DK | விஜய் ஷங்கரின் வைரல் பதிவு- வீடியோ

லண்டன்: இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரின் இன்ஸ்டாகிராம் கமெண்ட் இணையம் முழுக்க பெரிய வைரலாகி இருக்கிறது.

இந்திய அணியில் தொடர்ந்து அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. தினமும் அணிக்குள் ஒரு வீரர் எடுக்கப்படுவதும், ஒரு வீரர் நீக்கப்படுவதும் தொடர் கதையாகி உள்ளது.

முதலில் இந்திய அணியில் இருந்து தவான் காயம் காரணமாக விலகினார். நல்ல பார்மில் இருந்த அவர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார்.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

தவானை தொடர்ந்து இளம் வீரர் விஜய் சங்கரும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருக்கிறார். கால் விரலில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். பயிற்சியின் போது பும்ரா போட்ட யார்க்கரால் அவருக்கு கால் விரலில் காயம் ஏற்பட்டது. தற்போது இவர் சென்னை திரும்பிவிட்டார்.

வாய்ப்பு அளிக்கப்பட்டது

வாய்ப்பு அளிக்கப்பட்டது

இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து சென்ற போட்டியில் இந்திய அணியில் தினேஷ் காரத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 15 வருடமாக கிரிக்கெட் விளையாடும் அவர் வங்கதேசம் அணிக்கு எதிராகத்தான் முதல் உலகக் கோப்பை போட்டியில் அறிமுகமானார். இதை கொண்டாடும் வகையில் அவர் சந்தோசமாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து இருந்தார் .

என்ன பதில்

என்ன பதில்

இதற்கு தற்போது விஜய் சங்கர் பதில் அளித்து இருக்கிறார். அதில் அடுத்தடுத்த போட்டிகளில் நன்றாக விளையாடுவதற்காக வாழ்த்துக்கள் அண்ணா.. என்று தினேஷ் கார்த்திக் போஸ்டில் சக தமிழக வீரர் விஜய் சங்கர் பதில் அளித்துள்ளார்.

அவரின் போஸ்ட்

அவரின் போஸ்ட்

அவரின் இந்த கமெண்ட் பெரிய வைரலாகி உள்ளது. பாவம் விஜய் சங்கர் நிலை யாருக்கும் வர கூடாது. நல்ல வாய்ப்பு கிடைத்தும் அவர் அதை மிஸ் செய்து விட்டார். ஆனாலும் தற்போது மிகுந்த மரியாதையோடு சக வீரருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். எத்தனை வருத்தத்தோடு அவர் இதை போஸ்ட் செய்திருப்பார். இவருக்கும் ஒரு காலம் வரும் நிரூபிப்பார் என்று பலர் டிவிட் செய்து வருகிறார்கள்.

Story first published: Thursday, July 4, 2019, 12:57 [IST]
Other articles published on Jul 4, 2019
English summary
ICC World Cup 2019: A Team India player's comment on DK post may leave you crying for him.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+